பக்கம்:முல்லைக்கொடி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

அதனால் உளங்களித்த கன்னியர், ஊர் மன்றிற் சென்று கூடிக் கொல்லேற்றை வென்ற காளையரையும் அவர் குறித்த கன்னியரையும் பொருளாக வைத்துப் பாடியாடிக் குரவைக் கூத்து நிகழ்த்தி மகிழ்வர். பின்னர்த் திருமணம் நடைபெற்றதும், புதிய இல்லங் கண்டு, அங்கே புதிய வாழ்வு தொடங்குவர், காதலர்.

இவ்வாறமைந்த காதலும் கடிமணமும் ஆயரிடையே காணப்பட்ட ஒரு தனித்த பண்பாகும். கொல்லேறு தழுவலால் பலர் புண்படவும் உயிர் துறக்கவும் நேர்ந்த போதிலும், தம் குடிப் பெருமையையும், மரபையும் மறவாது போற்றும் இயல்புடையரான ஆயர், அதனைக் கைவிடாது உறுதியுடன் ஒம்பியே வந்தனர்.

இத்துணைத் திறனும் வல்லாண்மையும் கொண்ட ஆயர்கள், அவரவர் பேணிவந்த நிரைகளின் காரணமாகப் பழைய தமிழகத்தில் மூவேறு வகையினராகத் திகழ்ந்தனர். குலத்தால் குடியால் ஒருவரே யெனினும், நிரை காரணம் பற்றி வழங்கலான பெயர்கள் நாளடைவில் தந்தையின் மகன் என வழிவழி நின்று நிலவுவதும் ஆயிற்று.

எருமைகள் உடையவர் கோட்டினத்து ஆயர் என்றும், ஆநிரைகளைப் பேணி வாழ்ந்தவர் கோவினத்து ஆயர் அல்லது நல்லினத்து ஆயர் என்றும், ஆட்டினம் கொண்டு வாழ்ந்தவர் புல்லினத்து ஆயர் எனவும் குறிக்கப் பெற்று வந்தனர்.

இம் மூவகையினரும் தாம்தாம் கொண்டிருந்த மிகுதியான நிரைகளின் காரணமாக, வேறு வேறு பெயருடன் அழைக்கப்பட்டாலும், ஏறுதழுவலும் பிறவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/22&oldid=707866" இலிருந்து மீள்விக்கப்பட்டது