பக்கம்:முல்லைக்கொடி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

அனைவருக்கும் பொதுவே. ஓரினத்து ஆயமகன், மற்றோரினத்து ஆயமகளைக் கண்டு காதலிப்பதிலும், ஏறுதழுவி வென்று மணந்து வாழ்வதிலும், எவ்விதத் தடையும் கிடையாது. ஆனால், மூவகை நிரையினும் ஆநிரை சிறப்பாகக் கருதப்படுவதும், கோவினத்தாயர் பிறரினும் சிறப்புடன் மதிக்கப்படுவதும் இயல்பு.

மணம் பெற்றவர், தனி இல்லம் அமைத்து வாழ்வு தொடங்குவதே அக்கால ஆயர் மரபு. அஃதன்றித் தம் பெற்றோருடன் வாழ்தல் தம் பெருமைக்கு ஏற்றதல்ல என்றே அவர்கள் கருதினர். தாமே உழைத்துப் பெறும் பயனல்லது பெற்றோர் உழைப்பால் வரும் பயனை உண்டு களித்து வாழ்பவரை, வாழ எண்ணுபவரை ஆய மகள் ஒருத்தியும் தன் மணாளனாக ஏற்றுக் கொள்ளாள்! என்று முல்லைக் கலியுள் வரும் தொடர் ஒன்று இதனை வலியுறுத்துகின்றது.

தனித்தனிக் குடும்பங்களாக வாழும் ஆயர் பலரும், தனிவாழ்வில் ஒதுங்கி வாழ்ந்து வருபரும் அல்லர். நிரை மேய்த்தல் முதற்கொண்டு ஏறுதழுவல் குரவை அயர்தல் முதலிய பல செயல்களிலும் தம் ஊர்த் தலைவனின் தலைமையில் பலரும் ஒன்று கலந்து இயற்றுவதே அவர் ւDքTւ.

கோடை காலத்து, ஆயர்பாடியை யடுத்த பகுதி களில் புல் கிடையாது போகும். அக்காலத்தே, வளமுள்ள தொலைவான இடங்களுக்கும் ஆயர் தம் நிரைகளை ஒட்டிச் செல்வர். அப்போது, பலரும் தத்தம் நிரைக்ளை ஒருங்கு கூட்டிச் சென்று மேய்ப்பதும், பின்னர் மழை பெய்து ஊர்ப்புறத்தே புல்வளம் பெருகியதும், திரும்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/23&oldid=707867" இலிருந்து மீள்விக்கப்பட்டது