பக்கம்:முல்லைக்கொடி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

வந்து, தத்தம் நிரைகளைத் தமக்குள் பிரித்துக் கொள்வதும், ஆயரிடை பண்டுதொட்டு நிலவும் ஒரு வழக்கம் ஆகும். இதனை நிரை பிரித்தல் என்பர் சான்றோர். .

"இன்றும், மேய்ச்சல் நிலப் பகுதிகள் மிகுந்துள்ள உலக நாடுகள் பலவற்றுள், குதிரைமீது அமர்ந்து ஆநிரை மேய்ப்பதும், தப்பிச் சென்றவற்றைச் சுருக்குக் கயிறு வீசிப் பிடித்துக் கொணர்ந்து நிரை சேர்ப்பதும், நிரை பிரிப்பதும் பிறவும் உண்டு," என்பர், உலக மக்கள் நாகரிகம் பற்றிய நூற்களின் ஆசிரியர் பலரும்.

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள் தோள்’ என்ற கலியடியும், 'கொல்லேறு கொண்டான் இவள் கேள்வன் என ஊரவர் போற்றும் உரையை விரும்புவள் ஆயமகள் எனக் கலியில் வருஞ் செய்தியும், ஆயரிடை ஏறுதழுவுதல் எனும் துணிகரச் செயல் எந்த அளவு வன்மையாக வேரூன்றி இருந்தது எனக் காட்டுவதாகும். .

இவ்வாறாகப் பல பல சிறப்புக்களுடனும் அமைந்து விளங்கிய ஆயர்தம் வாழ்வில், காதலும், ஏறுதழுவி மணத்தலும் ஆகிய இரு பகுதியினையும், பல்வேறு நிகழ்ச்சிகளின் வழியாகச் சுவைபடக் கூறிச் செல்லு கின்றார், முல்லைக் கலியின் ஆசிரியர் நல்லுருத்திரனார்.

முல்லைக் கலியுள் வரும் செய்திகள்

பழைமை

தமிழகத்து வாழ்ந்த பழம் பெருங்குடியினர் பலரையும் போன்றே, தொன்றுதொட்டு வாழ்ந்து வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/24&oldid=707868" இலிருந்து மீள்விக்கப்பட்டது