பக்கம்:முல்லைக்கொடி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

பொதுவாக, ஆயர் அனைவரும் மாயோனையே தம் குல தெய்வமாகப் போற்றி வாழும் இயல்பினர். எனினும் பல சிறுசிறு தெய்வ வணக்கங்களும் அவரிடையே நிலவின. அதனைப் பல இடங்களில் முல்லைக் கலியுள் நாம் காணலாம்.

ஏறு தழுவுவதற்குச் செல்லுமுன்னர், தம் பெரு வலியில் தளராத உறுதியுடையவரேனும், "தமக்கு வெற்றி தேடித் தருமாறு, நீர்த் துறைகளிலும், ஆலடிகளிலும், மராமரங்களிலும் உறையும் தெய்வங்களை ஆயரிளைஞர் வழிபட்டனர்” என்பர், இதன் ஆசிரியர். கடம்பு அமர்ந்த தெய்வத்தை வழிபடுவதும் ஆயர் வழக்கம் என்று நாம் அறிகின்றோம்.

அத் தெய்வங்களுக்கு மாலைகள் பல புனைந்து போற்றுவர். புதிய மாலைகளைச் சூட்டுங்காலத்தே கழற்றிய பழைய மாலைகளைப் புறத்தே விட்டெறிவ தில்லை. கடவுளர்க்கு அணிவித்த மாலை, பிறர் காலால் மிதிபடுவது கூடாது என்று, அந்நாளைய ஆயரும் எண்ணினர் போலும். எனவே, அவற்றை, அவ்வத் தெய்வங்கள் அமர்ந்திருந்த மரக் கிளைகளின் மேல் விசி எறிவர். இவ்வாறு, நாள்தோறும் கழற்றி எறிந்த மலர் மாலைகள் பல அம் மரக் கிளைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் (பாடல் : ).

பல தெய்வங்களை வழிபட்டது போலவே, தம் குலத்திற்கு உரிய தெய்வமாகிய நீலவண்ண நெடியோனை யும் அவர்கள் போற்றினர். ஒலிக்கும் பாற்கடலில், பாம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/26&oldid=707870" இலிருந்து மீள்விக்கப்பட்டது