பக்கம்:முல்லைக்கொடி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

அணை மீது பள்ளிகொண்ட, நேமிப்படையேந்தியவனைப் பரவுதும் (பாடல் : 5) என வருவது காண்க.

மேலும், தெய்வ வழிபாட்டில் உளஞ்செலுத்தியது போன்றே, எதிர்பாராது நடக்குஞ் செயல்கள் எல்லாம் தெய்வத்தின் திருவுளக் கட்டளையால் நேர்வது என்றும் ஆயர் நம்பினர். ஒன்றைக் குறித்துப் பேச்சு எழுங்காலத்தே, எதிர்பாரா வகையில் ஆயர்களின் குழலோசை கேட்குமா யின், அக்காரியம் தவறாது பலிக்கும் என்பதன் அறிகுறி அது, என்று கருதினர். (பாடல் : 1)

சந்திர கிரஹணத்தைப் பற்றி முல்லைக் கலியுள் வரும் ஆயர் கொண்டிருந்த நம்பிக்கை என்ன தெரியுமா? 'பாம்பு வந்து பான்மதியை மறைக்கின்றது என்பதாகும். கிரஹணம் நீங்குவது எவ்வாறு திருமால் அப்பாம்பை ஒட்டி நிலவை விடுவிப்பான். (பாடல் : 4)

கொல்லேறுடன் ஆயரிளைஞன் போரிடுங்காலத்து, அவன் மார்பின் மாலையை அது கொம்பால் தூக்கி எறிய, அது அவன் காதலிபாற் சென்று விழ, அவள் தன் காதலன் அணிந்த மாலை எனும் ஆசையால், குழலில் சூட்டிக் கொண்டாள். எதிர்பாராது நிகழ்ந்த இதனைத் தெய்வ மால் கூட்டிற்று' என்று கருதினர், அவள் பெற்றோர். (பாடல் : 7)

தம் மன உறுதியைக் காட்டத் தெய்வத்தின் பெயரால் சூள் உரைப்பதும், அதனைக் கேட்டவர் அவன் உறுதியாகச் செய்வானென நம்புவதும், தெய்வ நம்பிக்கைக்கு மற்றோர் சான்று. (பாடல் :8)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/27&oldid=707871" இலிருந்து மீள்விக்கப்பட்டது