பக்கம்:முல்லைக்கொடி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மேலும், ஆய மகளிர், என்றும் தேயாத பெரும் புகழ்த் தெய்வத்தையே போற்றிப் பரவினர் என்பது, தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும் (பாடல் : 3) என்பதால் வெளிப்படுகின்றது.

ஆடலும் பாடலும்

சிலப்பதிகாரத்து ஆயர் சேரியிலே, கண்ணனைக் குறித்துக் குரவையாடியதாகப் படிக்கும் நாம், இளைஞரை யும் அவர் காதலியரையும் பாடற் பொருளாக வைத்து ஆயர்மகளிர் குரவையாடுவதையும், முடிவில் தாம் வாழும் நாட்டின் இறைவனான பாண்டியன் புகழை வாழ்த்தி அதனை முடிப்பதனையும், முல்லைக் கலியுள் காண் கின்றோம். இதனால், குரவைக் கூத்து இறைவனை வேண்டியும், களிப்பின் காரணமாகவும், பல்வேறு நிலைகளில் ஆயரால் ஆடப்பெற்று வந்தது என்று நாம் கருதலாம். காதலர் கைகோத்து ஆடுவதும் உண்டு, என்று ஓரிடத்தில் கூறப்படுகின்றது. -

கொல்லேறு தழுவும் விழாவின் முடிவில் ஏறும் வருந்தின, ஆயரும் புண் கூர்ந்தார். விழா அத்துடன் அன்றைக்கு நிறுத்தப்பட்டது. அதுவரை அந்தப் பயங்கர நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆயரின் மனம், அஃது நின்றதும், இன்பக் களியாட்டில் சென்றது. உடனே, "பொது மகளிர் எல்லோரும், புணர் குறிக்கொண்டு, பொதுவரோடு, முல்லையம் தண்பொழில் சேர்ந்தார். என்பர் ஆசிரியர் (பாடல் : 1). இதனால், ஆடவரும் மகளிரும் கூடிக் களித்தலும், பொழில் விளையாட்ட யர்தலும், ஆயரிடை வழக்கமாகத் திகழ்ந்தது எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/28&oldid=707872" இலிருந்து மீள்விக்கப்பட்டது