பக்கம்:முல்லைக்கொடி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

மகளிர் தனித்து நறுமண மலர்சூடி ஊர் மன்றத்தே அகமகிழ்ந்து ஆடுவதும் உண்டு. அம்மன்றம் வேலியிட்டும், சுவர் தடுத்தும் மறைக்கப் பெறாது, பலரும் கண்டு களிக்கும் திறந்த வெளி அரங்கமாகத் திகழும். ஆண்கள் பலர் அதனைக் கண்டு களிப்பதும் உண்டு. இளைஞர் அவ்வாடலில் கலந்துள்ள கன்னியரின் அழகிலும் ஆட்டத்திலும் மதிமயங்கி அவரைக் காதலிப்பதும் உண்டு. (பாடல் : 2)

ஏறு தழுவி ஒருவன் வெற்றி பெற்றதும், ஆயர் ஊர் மன்றிற்கூடி, அம்மகிழ்ச்சியைப் பாடியாடிக் கொண்டாடு வர். அப்போது, காளையை அடக்கிய இளைஞன், அவன் செந்நிற ஆடை, அவன் ஆற்றல் முதலியவற்றுடன், அவனை மணக்கவிருக்கும் கன்னியின் எழில்நலம் முதலியவற்றையும் குறித்துப் பாடி, அனைவரும் குரவையாடி மகிழ்வர். (பாடல் : 2)

பலரும் கொல்லேறு தழுவித் தத்தம் காதலியரை மணக்கவும், தன் காதலன் மட்டும் அதற்குத் துணியாது வாளாவிருப்பதும் கண்டு வருந்திய ஆயர் மகள், தன் தோழியின் துணையோடு, மன்றத்தில் சென்று, கொல்லேறு அஞ்சுவானை ஆயமகள் என்றும் மணக்க மனங்கொள்ளாள் ! எனவும், உயிர்க்கும் அஞ்சாது கொல்லேறு தழுவும் ஆண்மையாளனையே அவள் விரும்புவாள் எனவும், கொல்லேற்றுக் கோட்டிடை அஞ்சாது தழுவி வெற்றி கொள்வானுக்கு ஆயர் பரிசுப் பொருள் ஏதும் பெறாமலே தம் மகளிரைத் தருவர் என்றும் தன் குல மரபினை நினைவுபடுத்தி, அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/29&oldid=707873" இலிருந்து மீள்விக்கப்பட்டது