பக்கம்:முல்லைக்கொடி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

மேலும், தலையிற் பூவணிவது போலவே, கழுத்திலும் இடையிலும் மலர் மாலைகளை அணிந்து கொள்வதும் விழாக் காலங்களில் அவர் இயல்பு.

பூக்களில், சூடும் பூ எவை, சூடாப் பூ எவை என்று ஆயரிடை சில வரையறைகளும் இருந்தன. குடும் பூக்கள் மட்டுமே அவரால் அணியப்பெறும்.

காயாம்பூக் கண்ணி சூடிக் கருந்துவர் ஆடை யணிந்து, மேயும் நிரைமுன்னர்க் கோலூன்றி நின்று, குழலூதித் தம் நிரை காப்பவர் ஆயர். கருந்துவர் ஆடை போன்றே, செந்துவர் ஆடையும் ஆண்கள் அணிவர். கன்னியர் விரும்பியணிவது பூங்கரை தாழ்ந்த நீலச் சிற்றாடையே யாகும். (பாடல் : 1)

நாட்டுப் பற்று

பழந்தமிழ் நாட்டு ஆயர்குடிப் பெருமக்கள் பெரிதும் நாட்டுப் பற்று உடையவராயிருந்தனர். அவர்கள் பாடும் குரவைப் பாடல்கள் அதனைக் காட்டுகின்றன. பல சமயங்களில் ஆடிப் பாடி மகிழும்போது, நாட்டையும் நாட்டின் தலைவனையும் வாழ்த்த அவர்கள் மறப்பதே இல்லை!

"எங்கோ வாழியர் இம்மலர்தலை உலகே (பாடல் : 3), "வாடாச் சீர்த் தென்னவன்' (பாடல் : 4), தென்னவற்கு ஒருமொழி கொள்ள இவ்வுலகு உடன் பாடல் : 4, அமைவரல் அருவி ஆர்க்கும் இமையத்து உம்பரும் விளங்குக பாடல் : ), ஏற்றவர் புலம் கெடத் திறை கொண்டு, மாற்றாரைக் கடக்க எம் அறங்கெழு கோவே' (பாடல் : ), என்றெல்லாம் தம் நாடாளும் பாண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/31&oldid=707875" இலிருந்து மீள்விக்கப்பட்டது