பக்கம்:முல்லைக்கொடி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

L96T೯T೯೦೯T அவர் பாடுகின்றார். அங்கே ஒலிக்கும் தமிழ் நாட்டுப் பற்றினை ஒர்க,

காதல் வாழ்வு

காதல் வாழ்விலே, இளைஞன் எந்நேரமும் தன் இச்சையைத் தீர்த்து இன்புறுதலையே முதன்மையாகக் கருதுகின்றான். அவன் காதலியோ, அதில் அவனோடு மகிழ்ந்தாலும், விரைவில் மணம் பெற வேண்டும் என்றே விரும்புகின்றாள். பெற்றோர் தம் தகுதிக்குத் தக்கவனா, போட்டியில் வெல்வானா என்பதிலேயே கருத்தாயிருக் கின்றனர். தோழியோ, காதலனையும் உற்சாகப்படுத்திக் காதலியையும் தேற்றித் திருமணத்திற்குத் திட்டமிடு கின்றாள். இவ்வாறாகக் காதலும் மணமும் திறன்படக் காட்டப்படுகின்றது இந்நூலுள்.

எத்துணைதான்் காட்டிலே தனித்துக் கண்டு இளைஞன் வற்புறுத்தினாலும், அவனுக்குப் போக்குக் காட்டிவிட்டு மீளவே முயல்கின்ற பெண்மையின் இயல்பு மிகவும் அருமையாகப் பல இடங்களில் காட்டப் பட்டுள்ளது.

ஒருவனை விரும்பிக் காதலித்தவள், அவனையே மணந்து வாழ விரும்புவாள். எக்காரணங் கொண்டும் வேறொருவனை விரும்புவதில்லை. பெற்றோர் வற்புறுத்தி னாலும் அவள் இசைவதில்லை. அருநெறி ஆயர் மகளிர்க்கு இருமணம் கூடுதல் இல் இயல்பு அல்ல! என்று (பாடல் : 4) ஆசிரியர், ஆயமகள் வாயிலாகக் கூறுவது மிகவும் சிறப்புடைய பெண்மை நெறியாகும். காதலித்த வனை விட்டே வேறொருவனை மணந்து கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/32&oldid=707876" இலிருந்து மீள்விக்கப்பட்டது