பக்கம்:முல்லைக்கொடி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

ஆயமகள் விரும்ப மாட்டாள் என்றால், கணவனுடன் விவாக விலக்கும், பின்னர் விதவைத் திருமணமும், ஆயரால் அந்நாளிலேயே ஏற்றுக் கொள்ளப்படாதது என்பது தெளிவு.

காதலன் நெறியிலே பொய்ம்மை ஏற்பட்டால், ஆயமகள் வருந்தி வருந்திக் களவில் பெற்ற ஒரு நாளின்பத் தையே எண்ணி வாழ்வாள். அதனாலும் பிறரை மணக்க விரும்பாள். (பாடல் 13)

பெற்றோர் தம்மகட்குக் காதலனோடு உரையாடுதல் கூடாது; அவனைக் கண்டால் ஒதுங்கிவிடு; அவனோடு கூடிக் களவில் இன்புறுவது தகாது என்று கூறித் தடுப்பதும் உண்டு. (பாடல் 12)

'மத்தம் பிணித்த கயிறுபோல் சுற்றிச் சுழலும் என்நெஞ்சு (பாடல் : 1) என்று காதலன் கூறும் சொற்கள், காதல் வலைப்பட்டார் நெஞ்சம் நிற்கும் நிலையை நன்கு விளக்குகிறது. வேறு எப் பக்கம் அவன் நெஞ்சை இழுத்தாலும், அது அவள் நினைவிலேயே சுற்றிச் சுற்றிச் சுழலும். - -

தன் காதலன் பல பெண்களைக் கண்டு காமுற்றுத் திரிதல் கூடும் என்ற ஐயம், ஒரு காதலிக்கு எழ, அவள், ‘யாமுனியா ஏறுபோல் வைகல் பதின்மரைக் காமுற்றுச் செல்வாய்' எனக் குறை கூறுகின்றாள். இதனால், ஆயரிற் சிலர், பல பெண்களுடன் தொடர்பு கொள்வது உண்டெனவும், அதனை ஆய மகளிர் வெறுப்பதுவும் தெரிகின்றது. (பாடல் : 8)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/33&oldid=707877" இலிருந்து மீள்விக்கப்பட்டது