பக்கம்:முல்லைக்கொடி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

ஆயர் மகளிர் சொல்லாற்றல் மிக்கவர். சொல் லாட்டி நின்னொடு சொல்லாற்றுகிற்பார் யார்? என்று இளைஞர் கூறும் அளவு சொன்னயமுடன் அவர் பேசுவர். (பாடல் : 8)

பெண்கள் காதல் ஒருபுறம், பெற்றோர் ஒருபுறமாக இருக்கக் கண்டு, ஆசையும் அச்சமும் மேலெழச் செய்வதறியாது விழிக்கும் நிலையைத் தோழி கூற்றாக,

"ஆயர் மகனையும், காதலை, கைம்மிக; ஞாயையும் அஞ்சுதி; ஆயின், அரிதரோ நீயுற்ற நோய்க்கு மருந்து

எனவும்,

ஆண்கள் அவ்வாறே மனந் துணிவின்றித் துயருறும் நிலையை,

போரேற்று அருந்தலை அஞ்சலும், ஆய்ச்சியர் காரிகைத்தோள் காமுறுதலும் இவ்விரண்டும் ஒராங்குச் சேறல் இலவோ?

எனவும், ஆசிரியர் கூறுவது இளமை மனத்தின் இயல்பினை நன்கு விளக்குவதாகும்.

தந்தை, தன் மகள் மணம் கைகூடாதது கண்டு, வருந்தும் நிலை மிகவும் உருக்கமாகவுள்ளது.

தன் மகளை ஏறுதழுவி மணக்க ஒரிளைஞனும் முன்வராதது கண்டு, பெரிதும் மனம் வாடி வருந்தி நிற்கும் தந்தையின் உருவம், பெற்றோரின் பாசத்தை நன்கு காட்டு வதாக உள்ளது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/34&oldid=707878" இலிருந்து மீள்விக்கப்பட்டது