பக்கம்:முல்லைக்கொடி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

'பகல் இடக் கண்ணியன், பைதல் குழலன், அவல் மிசைக் கோல் அசைத்த கையன்’

என அத் தந்தையை நமக்குக் காட்டுகிறார் ஆசிரியர்.

இதேபோலத் தன் பொறுப்பிலுள்ள கன்னியின் கூந்தலில், அவள் காதலன் தந்த மலரைக் கண்டு, தன் கடமையில் தான்் தவறியதாகச் செவிலி உணர்வதும், தாய் ஏதும் பேசாமல் செல்வதும், மகள் மனங்குன்றிக் காட்டுள் சென்று ஒளிவதும், தாய், தகப்பனையும் பிறரையும் மணத்துக்கு இசையச் செய்வதும், எல்லாம் குடும்ப வாழ்விற்கு வேண்டிய பொறுப்பினையும் கடமையையும் நன்கு உணர்த்துவனவாகும். (பாடல் : 1.5)

ஏறுகள்

ஏறுகளிலே பல நிறங்கள் உடையவற்றை முல்லைக் கலியுள் நாம் சந்திக்கலாம்; பட்டுப்பூச்சியின் கருஞ்சிவப்பு நிறம் கொண்ட ஏறு, கரிய நிறத்துடன் நெற்றியிலே வெள்ளைச் சுழி விளங்கும் காளை, வெண்ணிறத்தின் இடையிடையே செந்நிறப் புள்ளிகள் விளங்கும் காளை, புகர் ஏறு, இன்னும் பல நிறங்கள்.

கொல்லேற்றை நினைத்தாலே உளம் நடுங்கும். அத்துணைக் கொடுமை யுடையன அவை. அவற்றோடு போரிடும் இளைஞர், பெரும் ஆற்றலுடையவராயிருந்தா லன்றி, அவற்றின் கோட்டிடையே சிக்கி மாய்வதன்றி, வேறு வழியில்லை.

வாளகப் பட்டானை ஒவ்வான் எனப் பெயரும் வீர மறவனைப் போலத் தன் முன்னர் வீழ்ந்தான்் மேல்

முல்லை-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/35&oldid=707879" இலிருந்து மீள்விக்கப்பட்டது