பக்கம்:முல்லைக்கொடி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

செல்லாது திரும்பி விட்டதாம் ஓர் ஏறு! (பாடல் : 4). அது மட்டுமல்ல, பால்நிற வெள்ளை எருதின் மேற் பாய்ந்து அடக்கினவனைக் கண்டு, தன் இனப்பற்றால் இளங்காரி சென்று சினத்துடன் குத்திற்றாம் (பாடல் : 4). ஏறுகளும் இவ்வாறு இனப் பண்புடன் விளங்குகின்றன. முல்லைக் கலியுள் என்றால், ஆயர்தம் ஒற்றுமைக்குக் கூறவா வேண்டும்? -

ஏறு தழுவல்

கர்விரிந்தன்ன சுரிநெற்றிக் காரி குடர்சொரியக் குத்திக் குலைப்பதன் தோற்றம்காண்.

(பாடல் : 1)

எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு, கவிழ்ந்தன மருப்பு, கலங்கினர் பலர். - (பாடல் : 2)

குருதிக் கோட்டோடு குடர் வலந்தன. (பாடல்: 3)

இரிபு எழுபு அதிர்பு அதிர்பு இகந்து உடன்பலர்நீங்க அரிபு அரிபு இறுபு இறுபு குடர்சோரக் குத்தித், தன் கோடு அழியக் கொண்டானை ஆட்டித் திரிபு உழக்கு வாடில் வெகுளி எழில்ஏறு. (பாடல் : 4)

கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டுவாய்ச் .

y . . . சாக்குத்திக் கொள்வார்ப் பெருகக் குரூஉச் செகில் காணிகா, பாடேற்றவரைப் படக்குத்திச் செங்காரிக் கோடெழுந்து ஆடும் கனமணி, காணிகா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/36&oldid=707880" இலிருந்து மீள்விக்கப்பட்டது