பக்கம்:முல்லைக்கொடி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

இவ்வாறு, மேலும் பலவாக வரும் தொடர்கள் ஏறு தழுவலின் கொடுமையை நன்கு காட்டுவனவாகும்.

மேலும்,

'நீறு எடுப்பவை நிலம் சாடுபவை மாறேற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவை'

- - (பாடல் : 6)

என்றெல்லாம் வருபவை, ஏறுகளின் கொடிய தன்மைகளை நன்கு விளக்கும்.

அக் கொடுமையாற் போலும்,

'மடவரே நல்லாயர் மக்கள்; நெருநல்

அடலேற்று எருத்து இறுத்தார்க் கண்டு மற்று இன்றும்

உடலேறு கோள் சாற்றுவார்’ என்று கருத்தும் இந்நூலுள் வந்துள்ளது.

இடைக்குலக் கன்னியர்

தலையிலே தயிர்க் கூடை சுமந்து செல்லுகிறாள் ஒருத்தி. குடம் சுட்டு இனத்துள், போர் ஆரா ஏற்றின் பொருநாகு இளம்பாண்டில் தேர் ஊரச் செம்மாந்தது போல், கம்பீரமாக நடந்து செல்கின்றாள். இவள் ஒயிலும் அழகும் கண்டு சிற்றுாரும் பேரூரும் ஆரவாரித்து மகிழும். தாய் சூட்டிய கண்ணி, கூந்தலில் ஒருபுறம் சரிந்து தொங்க இடை தளர முற்றத் துறந்த முனிவர் நெஞ்சையும் புண்படுத்தும் பேரழகி அவள். சென்றவள் திரும்பினாள்; தலையிலே வெறும் பானை, இடுப்பிலே நெல் வட்டி, கை வீசி நடந்தாள். காதிற் குழைகள் ஆடின. குலுங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/37&oldid=707881" இலிருந்து மீள்விக்கப்பட்டது