பக்கம்:முல்லைக்கொடி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

நடந்தபோது இடை ஒடிந்துவிடும் போலிருந்தது. அதைக் கண்ட இளைஞர்கள் உளங்களெலாம் நிலை தளர்ந்தன.

அது மட்டுமல்ல. கண்டார் உளம் கவரும் கட்டழகி அவள் என்பதும் உறுதி. அந்த அழகு எவ்வளவு கொடுமையை உடையது தெரியுமா? கண்டால் இன்பந் தரும் அழகுதான்். ஆனால், கண்டாரைப்பற்றி வருத்தும் அவள், அணங்கு எனக் கருதியும் அஞ்சினர் ஊர்ப் பெண்டிர். தம் கணவன்மார் அவள் பேரழகின் மயக்கத்தி னால் தம்மை மறந்து திரிவரோ என்ற போராட்டமே அவளைக் கண்டபோது, அவர்களுக்குப் பிறந்தது.

'தயிர் வேண்டாம், மாங்காய் நறுங்காடி கூட்டு வோம். அம்மா! நீ உன் கிளையோடு இவ்விடம் விட்டுப் போனாற் போதும்! என்று அக் கன்னியைத் துரத்த முயன்றனர் சில பெண்கள். ஆனால், தம் செயலுக்குக் கணவன்மார் ஆதரவு கிடையாது என்பதும் அவர்கள் அறிவர். ஆகவே, கொழுநரை வெளியே போக விடாமல், வாயிலை அடைத்துக் காத்து நின்றனர். இவ்வாறு கண்ட வர் உயிரினைக் கூற்றுவன்போல், தன்பால் வாங்கும் பேரழகு கொண்டிருந்தாளாம் அக் கன்னி நல்லாள்.

இந்தப் பேரழகும், அதனால் எழுந்ததாகப் பேசப் படும் ஆரவாரங்களும், புலவர் கற்பனை என்றே நாம் கருதினாலுங்கூட, ஆயர்குலக் கன்னியர் வாளிப்பான கட்டுடலும், கவர்ச்சி மிக்க பேரெழிலும் உடையவரா யிருந்தனர் என்று நன்கு அறிகின்றோம். -

'தீம்பால் கறந்த கலம் மாற்றிக், -

கன்றெல்லாம் தாம்பில் பிணித்து மனைநிறீஇ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/38&oldid=707882" இலிருந்து மீள்விக்கப்பட்டது