பக்கம்:முல்லைக்கொடி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

யாய்தந்த பூங்கரைநீலம் புடைதாழ, மெய் அசைஇப் பாங்கரும் முல்லையும் தாய பாட்டங்கால்'

செல்லும் அக் கன்னியரின் பேரழகிலே, ஆயரிளைஞர் சிக்குண்டதில் ஏதும் வியப்பதற்கில்லை.

உரையாடுந் திறம்

கன்னியரும் காதலரும் உரையாடுவதும், தோழியர் தமக்குள் உரையாடுவதும், பிறவுமாக வரும் உரையாடற் பகுதிகள் பலவும், இக்கலியுள் மிகவும் சுவையுள்ளனவாக விளங்குகின்றன. அவற்றிடையே, பாசம் கொண்ட நெஞ்சத்தினர், அதனை வெளிக்காட்டாது, நாணி மறைத்துப் பேசும் சொல்லாற்றல் மிகவும் நயம் உடையது. எடுத்துக்காட்டாக ஒன்று மட்டும் காண்போம்.

காளை நலமிக நந்திய நயவரு தடமென்தோள்

அலமரல் அமர் உண்கண் அந்நல்லாய்! நீ உறீஇ உலமரல் உயவு நோய்க்கு உய்யுமாறு

உரைத்துச் செல்.

கன்னி: பேரே முற்றார்போல முன்நின்று விலக்குவாய்

யார்? எல்லா! நின்னை அறிந்தது உம் இல்வழி!

காளை தளரியால் ! என்னறிதல் வேண்டின்,

பகை அஞ்சாப் புல்லினத்து ஆயர் மகனேன்,

மற்றுயான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/39&oldid=707883" இலிருந்து மீள்விக்கப்பட்டது