பக்கம்:முல்லைக்கொடி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

கன்னி: ஒக்குமன்;

புல்லினத்து ஆயனைநீ, ஆயின், குடஞ்சுட்டு நல்லினத்து ஆயர் எமர்;

காளை எல்லா! நின்னொடு சொல்லின் ஏதமோ

இல்லைமன்;

கன்னி: ஏதம் அன்று; எல்லை வருவான் விடு;

காளை விடேன்;

நின்மொழி கொண்டு யானோ விடுவேன், மற்று என்மொழி கொண்டு என் நெஞ்சம்

ஏவல் செயின்.

காளை நெஞ்சு ஏவல் செய்யாது என நின்றாய்க்கு,

எஞ்சிய காதல்கொள் காமம் கலக்குற, ஏதிலார் பொய்ம் மொழி தேறுவது என் ?

உரையாடல் எவ்வளவு நயமுடன் செல்கிறது பாருங்கள்! நறுக்கென்று பாக்குத் தெறித்தாற் போலப் பதில் கூறும் அப் பாவையரின் சொல்லாற்றல்தான்் என்னே! இது போல், ஒவ்வொரு பாட்டின்கண்ணும் வரும் நயங்களை நாம் காணும்போது, நம்மையறியாமலே நம்மினும் சிறந்தவர் நம் முன்னோர் என்ற முடிவுக்கே வருகின்றோம்.

குடும்பமும் காதலும்

தம் மகள் பிறனொருவனுடன் தம்மையுமறியாமல் உறவு கொண்டதை அறியின், பெற்றோர் மனநிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/40&oldid=707884" இலிருந்து மீள்விக்கப்பட்டது