பக்கம்:முல்லைக்கொடி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

முதலில் அதிர்ச்சி கொள்ளத்தான்் செய்கிறது. அதை நன்றாக விளக்குவது முல்லைக் கலியின் பதினைந்தாவது பாடல்.

வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே, அன்னையும் அத்தனும் இல்லரா, யாய்நான அன்னைமுன் வீழ்ந்தன்று அப்பூ.

காதலன் கொணர்ந்து அளித்த பூவைக் கூந்தலுள் பெய்து முடித்திருந்தாள் கன்னி. மறுநாள் தாய் மகளுக்குக் கூந்தல் முடிக்க அமர்ந்தவள், புதுப்பூவைக் கண்டு திகைத் தாள். அவள் முன்னே வீழ்ந்த பூ, அவள் அணிவித்தது அன்று, வேறு ஆகும். வேறு அணியக் காரணம் என்ன? காதல் நிலையோ? என எண்ணினாள்.

எண்ணியவள் வசை பேசவோ, அடிக்கவோ செய்தனளா? எனில் இல்லை. அவள் உள்ளம் அப்படியே இடிந்து தகர்ந்து விட்டது. தன் மகள் தனக்கும் மறைத்து, நடந்த நடத்தை அவளை மிகுதியும் புண்படுத்திக் கவலைக்குள்ளாக்கிற்று. ஏதும் ஆரவாரம் செய்யாது எழுந்து, வெளியே அப்படியே மகளை விட்டுவிட்டுப் போய்விட்டாள். கவலை சுமந்த தாயின் நெஞ்சம் என்ன பாடுபட்டது என்பதை, ろ

'அதனை, வினவலும் செய்யாள்; சினவலும் செய்யாள் நெருப்புக் கைதொட்டவர்போல விதிர்த்திட்டு நீங்கிப் புறங்கடைப் போயினாள்' என்ற அடிகள் நன்கு காட்டும்.

நடந்ததும், தாயின் மன வேதனையும் கண்ட மகள் இடிந்து போய்விட்டாள். நாணமும் அச்சமும் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/41&oldid=707885" இலிருந்து மீள்விக்கப்பட்டது