பக்கம்:முல்லைக்கொடி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

உள்ளத்தைக் கவ்விக் கொண்டன. என்ன செய்தனளாம்

தெரியுமா?

“யானும் என் சாந்துளர் கூழைமுடியா, நிலம் தாழ்ந்த பூங்கரை நீலம் தழிஇத் தளர்பு ஒல்கிப் பாங்கரும் கானத்து ஒளித்தேன்'

என்று கூறுகின்றாள். குடும்ப வாழ்வில் நிலவும் உண்மையான நிலையை வேறு எவ்விதம் விளக்கிக் காட்ட முடியும்?

உவமைகள்

சிறந்த பல உவமைகளை முல்லைக் கலியுள் நாம் கண்டு இன்புறலாம்:

"களிபட்டான் நிலையே போல் தடவுபு துடுப்புஈன்று ஞெலிபுடன் நிரைத்த நெகிழ் இதழ்க் கோடலும், 1 முல்லைமுகையும், முருந்தும் நிரைத்தன்ன பல்லர், பெருமழைக் கண்ணர், மடம்சேர்ந்த சொல்லர், சுடரும் கணங்குழைக் காதினர் 3 மீன்பூத்து அவிர்வரும் அந்திவான் விசும்புபோல் வான்பொறி பரந்த புள்ளி வெள்ளை”

இவைபோல் பலவாக விளங்குவனவற்றைப் பாடல் களுள் ஆங்காங்கே கண்டு நயந்துய்த்தல் வேண்டுமேயன்றி வேறல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/42&oldid=707886" இலிருந்து மீள்விக்கப்பட்டது