பக்கம்:முல்லைக்கொடி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏறும் வருந்தின

முல்லை நிலத்துச் சிற்றுார்; அவ்வூர்வாழ் ஆயர்க்கு அன்று ஒரு திருவிழா. கொல்லேறு தழுவும் விழா, அன்று அவ்வூரில் நடைபெற இருந்தது. ஏறு தழுவும் அவ்விழா, ஆயர்களின் நாகரிகத்தை விளக்கும் விழாவாகும். ஆக்க ளோடும், ஆனேறுகளோடும் வாழ வேண்டிய ஆயர், அவற்றை அடக்கி ஆளவல்ல ஆண்மையிற் சிறந்திருந்த னர். அவ்வாறு, அவ்வாண்மையிற் சிறந்திருந்த அவர்கள், தம் மகளிரை மணக்க வரும் மாப்பிள்ளைமார்களும், அவ் வாண்மை யுடையராதல் வேண்டும்; அவர் பால் அவ்வாண்மை இன்றேல், அவர்கள், அவைகளால் அழிவுறுவர்; அவர் அழிவுற்றால், தம் மகளிர் வாழ்வு மாண்பிழக்கும்: அவ்வவல நிலை தம் மகளிர்க்கு வராமை வேண்டும் என விரும்பினர்; அதனால், தம் மகளிர் மணத்திற்கு ஒரு கட்டுப்பாடு வகுத்தனர். மகள் பிறந்த அன்றே, தன் தொழுவினின்றும், ஓர் ஆனேற்றுக் கன்றைக் கட்டவிழ்த்துவிடுவர் வீட்டில் மகள் வளர, அது காட்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/45&oldid=707889" இலிருந்து மீள்விக்கப்பட்டது