பக்கம்:முல்லைக்கொடி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ந் புலவர் கா. கோவிந்தன்

வளரும்; மகள் மணப் பருவம் வந்துற்றதும், காட்டில் கட்டுப்பாடற்று வளர்ந்த காளையைக் கொண்டு வருவர். ஊர்ப் பொதுவிடத்தே, பெரிய தொழு அமைத்து, அதனுள் அக் காளையை விடுத்து, "இவ்வானேற்றை அடக்கி ஆட்கொள்வான் எவனோ, அவனே, என் மகளை மணக்கத்தக்கவனாவன்!" எனப் பறையறைந்து அறிவிப்பர். அப் பெண்ணை மணக்க மனம் துடித்து நிற்கும் ஆயரிளைஞர், தொழுவுள் புகுந்து, காளையைக் கட்டிப் பிடிக்க முனைவர். புகுந்தாருள் சிலர் அதை அடக்க மாட்டாது அகல்வர்; சிலர் அக் காளையால் கொல்லப் படுவர்; இறுதியில் அதை அடக்கிய இளைஞனுக்கு மகளை மணம் செய்து தருவர். இவ்விழாவே ஏறு தழுவும் விழா கொல்லேறு தழுவும் நல்ல விழா. ஆயர், அவ் விழாவைத் தனித்தனியே கொண்டாடாது, தம் ஆயர் பாடியில் மணப் பருவம் வந்துற்ற மகளிர் அனைவர்க்கும், மாப்பிள்ளைத் தேர்வை ஒருசேரக் கொள்வர். மகளிர்க்குரிய காளைகள் பலவும் தொழுவுள் விடப்படும்; ஊர்த் தலைவன்.முன் வந்து, காளைகளையும், அக் காளை களை அடக்கினால் மணக்கலாம் ஆயர் மகளிரையும், என்று தனித்தனியே சுட்டிக்காட்டி விழாவைத் தொடங்கு வான். ஆயர் இளைஞர், தொழுவுள் புகுந்து, தாம் தாம் விரும்பும் பெண்ணுக்குரிய காளை எது என அறிந்து, அதனோடு போரிட்டு அடக்க முனைவர்; அடக்கி வெற்றி கண்ட இளைஞர்க்கு, மகளிரை மணம் செய்து மகிழ்வர். அத்தகைய ஒரு பெருவிழா, அவ்வூரில், அன்று நடைபெற இருந்தது. மகளிரைப் பெற்ற ஆயர், தம்மை அழகாக அணி செய்து கொண்டனர்; சிற்றுரை அடுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/46&oldid=707890" இலிருந்து மீள்விக்கப்பட்டது