பக்கம்:முல்லைக்கொடி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி ஆழ் 45

முல்லைக் காட்டுள் புகுந்து, ஆங்குக் கார்காலத்து மழை பெற்றுப் புத்தம் புதிய அரும்பின்று மலர்ந்திருந்த பிடவ மலரை, அதன் புறத்தே முள் நிறைந்திருப்பதையும் பொருட்படுத்தாது, பறித்துக் கொண்டனர். கள்ளுண்டு' களித்தவன், நிலை கலங்கி ஆடுவதுபோல், காற்றில் ஆடி அலையும் காந்தட் செடியில், துடுப்பென அரும்பீன்று, கடைந்தெடுத்த தீயில் பிறந்த நெருப்பெனச் சிவந்து தோன்றும் மலர்களையும் பறித்துக் கொண்டனர். மீண்டு வருங்கால், தம் ஊர் எல்லையில், நீலமணியின் நிறத்தைக் காட்டி மலர்ந்திருக்கும் காயா மலரிலும் சிறிது பறித்துக் கொண்டனர். கொண்டு வந்த மலர்களை, வெண்ணிறப் பிடவம், செந்நிறக் காந்தள், நீலநிறக் காயா எனும் வரிசை மாறி மாறித் தோன்றி வனப்பு மிகுமாறு தொடுத்தனர்; தொடுத்த மாலைகளைத், தம் தலை மயிரின் முடியைச் சுற்றி அணிந்து மகிழ்ந்தனர்.

அணி செய்து கொண்ட ஆயர் அனைவரும், ஒன்று திரண்டு, ஊர்ப்பொதுவிடம் அடைந்து, ஆங்கே அமைந்துள்ள தொழுவைச் சூழ அமைந்திருந்த பரண் மீது ஏறி அமர்ந்தனர். அந்நிலையில் மகளிரைப் பெற்ற ஆயர், தம் மகளிரோடும், அம்மகளிர்க் கென விடப்பட்ட காளை களோடும் வந்து, மகளிரை வரிசையாக ஒருபால் நிறுத்திவிட்டு, நன்கு சீவப்பெற்ற கோடுகளைக் கொண்ட அக் கொல்லேறுகளைத் தொழுவுள் விடுத்தனர். சிலர் தொழுவைச் சூழவந்து. முரசு முழங்கினாற் போலவும்,

இடி இடித்தாற் போலவும் பேரொலி எழுமாறு பறைகளைக் கொட்டினர். விழா இனிது முடிக எனக் கடவுளை வழிபட்டு எழுப்பிய புகையின் நறுமணமும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/47&oldid=707891" இலிருந்து மீள்விக்கப்பட்டது