பக்கம்:முல்லைக்கொடி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி ஆ 49

அவளைத் தேற்றிய தோழி, இளைஞன், மணத்திற் குரிய முயற்சி மேற்கொள்ளாது, இவ்வாறே மறைந்து மறைந்து வந்து செல்வானாயின், இவள் வருத்தம் மிகும்; ஆகவே, அவனைக் கண்டு, வலிய வந்து, ஏறு தழுவலை விரைவில் மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ள விரும்பி னாள். ஆயர்குல இளைஞர்களிடையே அமர்ந்து ஏறு தழுவலை இமையாது பார்த்திருக்கும் அவனைக் கண்டு, ஆங்குச் சென்று, அவனைத் தனியாக அழைத்து, "அன்ப! இன்று ஏறு தழுவும் இவ்விளைஞர்களைப்போல், நீயும் ஏறு தழுவி, இவளை மணந்து கொள்வாயாக! ஏறுதழுவற்போரில் இன்னல் விளையுமோ என எண்ணி அஞ்சாதே! இன்று நிகழும் நன்னிமித்தங்கள், நீ தழுவப் புகும் காளை, ஆண் யானை போலும் ஆற்றல் வாய்ந்ததாயினும், அதை நீ அடக்கி ஆள்வை என்பதை உறுதி செய்கின்றன. மேலும் இவ்வாயர் மகள் தோள், ஏனையோர் தோளினும், வெற்றியளிக்க வல்ல நல்ல வாய்ப்பு வாய்ந்ததாகும்; ஆகவே, அஞ்சாது வந்து, ஏறு தழுவி, இவளை மணந்து மகிழ்வாயாக!” என வேண்டிக் கொண்டாள்.

அவ்வாறு வேண்டிக் கொண்ட பின்னர், அப் பெண்ணின் தந்தை யார், அப் பெண்ணை மணப்பதற்கு அவன் அடக்க வேண்டிய ೯p! எது என்பனவற்றை அவனுக்கு அறிவிக்க விரும்பிய தோழி, "அன்ப! அதோ, பன்மலர்க் கண்ணி சூடி, மகள் இன்னமும் மணமின்றிக் கிடக்கின்றனளே என்ற கவலை மனத்தை அழுத்துவதால், ஊதும் குழலில் துன்ப இசை எழுப்பித் தோள் மீது வைத்த கோல் மீது கையூன்று நிற்கும் அவனே இவள் தந்தை, அவன் அண்மையில் நிற்கும் கொல்லேறே, நீ, இவள்

முல்லை-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/51&oldid=707895" இலிருந்து மீள்விக்கப்பட்டது