பக்கம்:முல்லைக்கொடி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இ. புலவர் கா. கோவிந்தன்

பொருட்டு, அடக்க வேண்டிய ஏறு. அன்ப! இக் காளையை அடக்கி ஆள வல்லார்க்கே, கறுத்துத் திரண்ட கூந்தல் உடைய இவளை மணக்கத் தருவேம், ஆதலின், இக் கொல்லேற்றைத் தழுவ, இன்னே முயல்க!” என அவனை ஊக்கிவிட்டு, மீண்டு வந்து, அப் பெண்ணோடு சேர்ந்து கொண்டாள்.

இளைஞனை ஊக்கிய பின்னர், அப் பெண்ணைப் பார்த்துப் "பெண்ணே! நம் காதலனைக் கண்டு, நம் கவலையைக் கூறினேன்; கூறிக்கொண்டிருக்கும் பொழுதே, அவன் கண்கள் தரும் குறிப்பைக் கண்டேன்; அது, அவன் உறுதியை-மணந்து மனையறம் மேற் கொள்ளத் துடிக்கும் மனக் குறிப்பை உணர்த்தக் கண்டேன்; நாம் மேய்க்கக் கொண்டு செல்லும் நம் பசுக் கூட்டத்திற்கிடையே நின்று, ஏறு தழுவி வீறு கொள்ள வல்லார், எனக்கு நிகரானவர் எவரும் இல்லை! எனத் தன் ஆண்மைச் சிறப்பை அறிவிக்கும் அவன், என்றேனும் ஒரு நாள், ஏறு தழுவி, நம்மைத் தனக்கு உரியளாக்கிக் கொள்வன், இஃது உறுதி!” என்றெல்லாம் கூறி, அவள் ஐயத்தையும், அச்சத்தையும் அகற்றினாள்.

அவள் அது கூறிக்கொண்டிருக்குங்கால், ஏறுதழுவல் விழா முடிவுற்றது; விழாத் தலைவன், ஏறுகளும் இளைத்து விட்டன; ஏறு தழுவ வந்த இளைஞர்களும் புண்பெற்று இளைத்தனர். ஆகவே, இன்றைய விழா, இந்த அளவோடு முடிக!” என்று அறிவித்தான்். அது கேட்டு, ஆங்குக் கூடியிருந்த ஆயர் மகளரிர், தத்தம் காதலரோடு களித்து மகிழக் காடு நோக்கிப் போயினர்; தோழி, அதை அவளுக்குக் காட்டிக், காட்டுள் புகுந்து விளையாட, அவளையும் அழைத்துக் கொண்டு ஆங்குச் சென்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/52&oldid=707896" இலிருந்து மீள்விக்கப்பட்டது