பக்கம்:முல்லைக்கொடி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி ஆ 51

தளிபெறு தண்புலத்துத் தலைப்பெயற்கு அரும்பு ஈன்று முளிமுதல் பொதுளிய முட்புறப் பிடவமும், களிபட்டான் நிலையேபோல் தடவுபு துடுப்பு ஈன்று ஞெலிபுடன் நிரைத்த ஞெகிழ்இதழ்க் கோடலும், மணிபுரை உருவின காயாவும், பிறவும் . 5 அணிகொள மலைந்த கண்ணியர், தொகுபுஉடன் மாறெதிர்கொண்ட தம்மைந்து உடன்நிறுமார், சிறரும் முன்பினோன் கணிச்சிபோல் கோடுரீஇ ஏறு தொழுஉப் புகுத்தனர் இயைபுடன் ஒருங்கு அவ்வழி, முழக்கென, இடியென, முன்சமத்து ஆர்ப்ப 10 வழக்குமாறு கொண்டு வருபுவருபு ஈண்டி, நறையொடு துகள்எழ; நல்லவர் அணி நிற்பத் துறையும், ஆலமும், தொல்வலி மராஅமும் முறையுளி பராஅய்ப் பாய்ந்தனர் தொழுஉ; மேற்பாட்டு உலண்டின் நிறன்ஒக்கும் புன்குருக்கண் 15 நோக்கு அஞ்சான், பாய்ந்த பொதுவனைச் சாக்குத்திக் கோட்டிடைக்கொண்டு குலைப்பதன் தோற்றம்காண்; அம்சீர் அசைஇயல் கூந்தல் கைநீட்டியான் நெஞ்சம் பிளந்திட்டு நேரார் நடுவண் தன் வஞ்சினம் வாய்த்தான்ும் போன்ம்; 20 சுடர்விரிந்தன்ன சுரிநெற்றிக்காரி, - விடர்இயம் கண்ணிப் பொதுவனைச் சாடிக் குடர்சொரியக் குத்திக் குலைப்பதன் தோற்றம்காண்; படர்அணி அந்திப் பசுங்கண் கடவுள் இடரிய ஏற்றெருமை நெஞ்சு இடந்திட்டுக் 25 குடர்கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்; செவிமறை நேர்மின்னு நுண்பொறி வெள்ளைக் கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவனைச்சாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/53&oldid=707897" இலிருந்து மீள்விக்கப்பட்டது