பக்கம்:முல்லைக்கொடி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி 53

1. தளி - மழை, புலம் - முல்லைநிலம், தலைப்பெயல் - முதல் மழை, 2. முளி - கிேடைகாலத்தில் உலர்ந்த கிளை, பொதுளிய தழைத்த முட்புற - புறத்தே முள்ளை உடைய, 3. களிபட்டான் - கள்ளுண்டு களித்தவன், தடவுபு - அசைந்து துடுப்பு துடுப்புப் போலும் அரும்பு, 4. ஞெலிபு - தீயைக் கடைந்து, ஞெகிழ் - அலர்ந்த, கோடல் - செங்காந்தள். 5. மணி - நீலமணி, புரை - ஒக்கும்; 6. தொகுபு - கூடி, உடன்தொகுபுகு என மாற்றுக. 7. மைந்து - வலிமை; நிறுமார் - நிலைநாட்டுதற் பொருட்டு, 8. முன்பினோன் - வலியினை உடைய சிவன், கணிச்சி - குந்தாலிப் படை சீஇ - சீவப் பெற்று, 10 சமம் - நிலம், 11 வருபு வருபு - வந்து வந்து ஈண்டி - கூடி 12. நறை - மணப்புகை, நல்லவர் - ஆயர்மளிர் 14. முறையுளி - முறையாக, பராஅய் - வணங்கி; 15. மேற்பாட்டு - கொம்பின் உயர்ந்த இடம்; உலண்டு - பட்டுப்புழு புன்குருக்கண்புல்லிய நிறத்தைக் கொண்ட, 18. அம்சீர் - அழகும் சிறப்பும் பொருந்திய அசைஇயல் - மெல்லிய சாயல் அமைந்த துரோபதை: 19. நேரார் - பகைவர்; 21. சுடர் - திங்கள்; கரி - சுழி, காரி - கரிய எருது; 22. விடரிஅம்கண்ணி - மலைப் பிளப்பில் மலர்ந்த மலர்கொண்டு தொடுத்த அழகிய தலைமாலை; 24. படர் அணி -துன்பங்கள் சூழ்ந்த, அந்தி - ஊழிக்காலம்; பசுங்கண் கடவுள் - பசிய நிறம் வாய்ந்த பார்வதியைப் பாதியில் கொண்ட சிவன், 25. இடரிய - துன்பத்தைத் தந்த, எருமை - எருமைக்கு உரிய இயமன், 28. கதன் - சினம், 31. தாளில் - தன் ஆண்மையால்; கடந்து அட்டு - வென்று கொன்று, 35. மணிமாலை - அழகிய மாலைக் காலம், குழல் கேள்வனைத் தரும் என்க.36. கண்- தறுகண்மை;37. ஆயின் -நிமித்தங்களை ஆராய்ந்து நோக்கினால்,ஆயின் கொள்குவை என மாற்றுக, படாஅகை - வெற்றிக்கொடி, 38. பகலிட - பகற்காலத்தே மலர்ந்த மலர் கொண்டு தொடுத்த பைதல் - துன்பம், 40. சுவல் - தோள், 41. பல்லிருங் கூந்தல் - அடர்ந்த கரிய கூந்தலை உடைய இவளை:42. அணை - அணைய:43 கோளாளன் - அடக்கிப் பிடிக்க வல்லவன்; நம்மானுள் - நம்மந்தையுள், 45. கேளாளன் - உறவினன். .. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/55&oldid=707899" இலிருந்து மீள்விக்கப்பட்டது