பக்கம்:முல்லைக்கொடி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மடவரே நல்லாயர்

ஆயர் குலத்து வந்தவன் அவ்விளைஞன், ஆண்மை மிக்கவன்; கல்லினும் வலியன அவன் தோள்கள்; கரு நீல மலர்போல் கறுத்துத் திரண்டிருந்தது அவன் மேனி; அத்தகையவன். ஒரு நாள், செந்நிற ஆடை உடுத்துப் பன்னிற மலர் கொண்டு தொகுத்த மாலை அணிந்து, தன் ஆருயிர் நண்பனையும் உடனழைத்துக் கொண்டு, தன் ஆயர்பாடியை யடுத்திருந்த ஒர் ஆயர்பாடி நோக்கிச் சென்றான். ஆங்கடைந்த இருவரும், அப்பாடியின் இடையே இருந்த ஊர் மன்றத்தில், அவ்வூர் இடைக்குல மகளிர் ஒன்று கூடி ஆடி மகிழ்வதைக் கண்டனர்; கார் காலத்து மழை, காலத்தில் பெய்தமையால், காட்டில் தழைத்து வளர்ந்த நறுமணம் நாறும் பிடவம், கொடி நிறை மலர்ந்து மணக்கும் முல்லை, வனப்பு மிக்க வண்ணங்களால் நிறைந்த காந்தள், கொத்துக் கொத்தாக மலரும் மாண்பு மிக்க கொன்றை ஆகிய மலர்களோடு, வேறு சில மலர்களையும் பறித்துக் கொணர்ந்து, இடையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/56&oldid=707900" இலிருந்து மீள்விக்கப்பட்டது