பக்கம்:முல்லைக்கொடி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி 55

உடுக்கும் ஆடைபோலவும், மார்பில் ஆடும் மாலை போலவும், கழுத்தில் அணியும் அணிபோலவும் தொகுத்து அணிந்து, அகம் மகிழ்ந்து ஆடிக் கொண்டிருந்தனர் அம் மகளிர்.

ஆயர் மகளிரையும், அவர் ஆடல் பாடலையும், இளைஞர்கள் இருவரும் இமை கொட்டாமல் நோக்கி இன்புற்றனர். அந்நிலையில், இளைஞன், அருகிருக்கும் நண்பனை அழைத்து, அம்மகளிர் நடுவே, ஆங்குள்ளார் அனைவரிலும் பேரழகுடையளாய பெண்ணொருத் தியைச் சுட்டிக்காட்டி, "நண்ப! தோழியர் சூழ்ந்து நிற்க, அதோ தோன்றும் அவள், என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டாள்; உடலோடு என் உள்ளத்துட் குடி புகுந்து அதைத் தனதாக்கிக் கொண்டாள். நண்ப! என் உயிரோடு இரண்டறக் கலந்து போன அவள் யார்? அவள் பெயர் யாது? அவள் பிறந்த ஊர் எது? அவளைப் பெற்றெடுத்த பெரியோர் யாவர்?" என வினாமேல் வினா வாய் வினவி, அவனளிக்கும் விடையினை எதிர்நோக்கி நின்றான். -

பாங்கன் அவ்வாயர்பாடியை முன்னரே அறிவான்; அவ்வூரில் வாழ்வார் ஒவ்வொருவரையும் அவன் அறிந்திருந்தான்்; அதனால், நண்பன் அறியத் துடிப்பதை, அப்பொழுதே அறிவிக்கும் நிலையில் இருந்த அவன், “நண்ப! நின் உள்ளம் கவர்ந்த அக் கன்னி, இவ்வாயர்பாடித் தலைவன் ஈன்ற அருமை மகள்; அவள் பண்பும் பேரழகும் அறிந்து அவளை மணக்க முன் வருவார் பலர்; ஆனால், அவருள் ஒருவராலும் அவளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/57&oldid=707901" இலிருந்து மீள்விக்கப்பட்டது