பக்கம்:முல்லைக்கொடி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 இ. புலவர் கா. கோவிந்தன்

மணக்க முடியவில்லை. நண்ப! அவள் வீட்டில் ஒரு கொல்லேறு வளருகிறது; சண்டை என்றால் சளைக்காது அது; அக் காளையைக் கட்டிப் பிடித்து அடக்க வல்ல ஆற்றல் உடையவர்க்கே, தன் மகளை மணம் செய்து கொடுப்பேன் என அவள் தந்தை கூறிவருகிறான். அதை இவ்வூரார் அறிவர்; அவ்வேற்றின் ஆற்றலும், அவள் தந்தை உறுதிப்பாடும் கண்டு அஞ்சி, அவள்பால் கொண்ட ஆசையை அடக்கி வாழ்கின்றனர், அவளை மணக்க விரும்பும் இவ்வூர் இளைஞர்கள்!” என, அவள் குறித்துத் தான்் அறிந்த செய்திகளை அவன் அறியக் கூறினான்.

மங்கையை மணக்கும் மார்க்கம் இதுவென அறிந்து

גלן

கொண்ட இளைஞன், அக்கணமே, "நண்ப! ஏற்றினை அடக்கி, அவளை ஏற்றுக் கொள்ள இன்றே துணிந்து விட்டேன்; என் துணிவை அவள் பெற்றோர்க்கு இப்பொழுதே அறிவித்து வருக!” எனக் கூறி விடுத்தான்். அவனும் அவ்வாறே சென்று அவர்க்கு அறிவித்தான்். காளையை அடக்கிக் கன்னியை மணம் செய்துகொண்டு போவானை அன்று வரை காணாது கலங்கியிருந்த பெண்ணைப் பெற்றோரும், பெண்ணுடன் பிறந்தோரும், அவன் கூறியன கேட்டு அகம் மகிழ்ந்தனர்; அந் நல்வாய்ப்பை நழுவ விட அவர்கள் விரும்பவில்லை. அதனால், காலத்தை வீணாக்காது, மகள் மணம் குறித்து நிகழ்த்தும் கொல்லேறு தழுவும் நல்விழாவை அன்றே கொண்டாட முனைந்தனர்; தம் கருத்தைப் பறையறைந்து ஊரார்க்கு அறிவித்தனர். அது கேட்ட ஊரார், ஊர்த் தலைவன் மகளுக்கு மணம் நிகழும் அன்றே, தம் மகளிர்க்கும் மணம் முடிக்க விரும்பினர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/58&oldid=707902" இலிருந்து மீள்விக்கப்பட்டது