பக்கம்:முல்லைக்கொடி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி ஆ 57

ஊர் நடுவே பரந்து கிடந்த பெரிய வெளியில் ஒரு தொழுவும், தொழுவைச் சூழ உயர்ந்த பரனும் அமைத்தனர்; மணப் பருவம் எய்திய தம் மகளிரோடும், அம் மகளிர்க்கு என விடுத்த காளைகளோடும், ஆயர் மன்றம் புகுந்தனர்; ஆயர்குல முதியோர், மயில் நிகர் மகளிரை மணக்க விரும்பும் காளையர், அம்மகளிரையும், மங்கையர்தம்மை மணக்க முன் வரும் இளைஞர்களையும், ஏறு தழுவி அடக்கும் அவர் ஆற்றலையும் நன்றாகக் காணுதற்பொருட்டு, மகளிர்க்குப் பரணில் உயர்ந்த இடம் அளிக்குமாறு பணித்தனர்; அவர்களும் அவ்வாறே ஏறி அமர்ந்தனர். ஆயரும், ஆயர்பாடித் தலைவனும், பரணில் தத்தமக்குரிய இடத்தில் வந்து அமர்ந்தனர்.

கொல்லேறுகள் தொழுவினுள் கொண்டு விடப் பெற்றன. காளைகளை அடக்கிக் கடிமணம் கொள்ளவந்த ஆயர்குல இளைஞர், தத்தம் காதலியர்க்குரிய காளை எனத் தேர்ந்து, அவற்றின் எதிர் சென்று அடக்க முனைந்தனர். புதிய அத்தொழுவையும், அதைச் சூழக் கூடியிருக்கும் ஆயர் பெருங் கூட்டத்தையும் கண்டும், விழாக் குறித்து ஆங்கு எழும் பறையொலி கேட்டும், சினம் கொண்ட காளைகள், இளைஞர்கள் தம்மை அணுகிவரக் காணவே, கடுங்கோபம் கொண்டு, இடியென ஒலித்து, அவர்மீது பாயக் காற்றெனக் கடுக ஓடின.

- காளைகளுக்கும் காளைநிகர் காதலர்க்கு மிடையே போர் தொடங்கி விட்டது; போர் நிகழ்ச்சியால் எழுந்த புழுதி, மன்றம் முழுதும் பரந்தது; ஏறுகளின் கோடுகளுக்கு அஞ்சாது, இளைஞர்கள் தம் மார்புகளைக் காட்டி நின்றனர்; கொம்புகள் அவர் மார்பில் ஆழப் பதியுமாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/59&oldid=707903" இலிருந்து மீள்விக்கப்பட்டது