பக்கம்:முல்லைக்கொடி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ஆ. புலவர் கா. கோவிந்தன்

அவர் மீது பாய்ந்தன; அதனால், இளைஞர்களுள் ஆற்றல் குறைந்தவர் தளர்ந்து தடுமாறினர்.

ஆனால், ஆயர்பாடித் தலைவன் மகளைக் காதலித்து, அவளுக்குரிய காளையைக் கட்டிப் பிடிக்க முன்வந்த அவ்வயலூர் இளைஞன், சிறிதும் தளர்ந்தா னல்லன்; அவன் அவள் மீது கொண்ட காதல் வெறி அவன் ஊக்கத்திற்கு உரம் ஊட்டிற்று; காளையின் கழுத்தும், கருத்துத் திரண்ட தன் கழுத்தும் ஒரு சேரப் பொருந்துமாறு, காளையின் கழுத்தை இறுகப் பிடித்து அதன் ஆற்றலை ஒடுக்கினான்; நெருக்கிப் பிடித்த அவன் பிடியால் நிலை கலங்கிற்று அக் காளை, உடனே, அதன் திமில்மீது பாய்ந்து, கீழே வீழ்த்தி, அவ் வெற்றிக் களிப்பு விளங்கத் தலை நிமிர்ந்து நின்றான்.

ஆற்றல் வாய்ந்தன; எவராலும் அடக்க முடியாதன எனப் பெருமை பெற்ற தம் காளைகள் அடங்கி ஆற்றல் குறைந்தமை கண்டு, ஆயர் தொடக்கத்தில் சிறிதே கலங்கினர்; ஆனால், காளைகளை அடக்கி வென்றோர், தம் மகளிரை மணக்க வரும் மணவாளராகவே, சினம் மாறிச் சிந்தை மகிழ்ந்தனர்; ஆயர்களின் இவ்வுள்ளத் துடிப்பினை, அவர் முகக் குறிப்பால், கண்ட முதியோர் சிலர், ஏறு தழுவலின் கொடுமை இது என்பதைப் பண்டே அறிந்திருந்தும், மீண்டும், அவ்வேறுதழுவல் விழாவெடுத்து, அதன் முடிவு கண்டு வருந்தும் இவ்வாயர், அறவே அறிவற்றுப் போயினர் போலும் என, அவர் அறியாமை கண்டு எள்ளி நகைக்கத் தலைப்பட்டனர். நிற்க.

ஏறு தழுவும் நிகழ்ச்சி ஒருவாறு முடிந்தது. ஊர் மன்றத்தில் ஆயர் மகளிர் பலரும் ஒன்று கூடித், தம் ஊர்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/60&oldid=707904" இலிருந்து மீள்விக்கப்பட்டது