பக்கம்:முல்லைக்கொடி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 61

எழுந்தது துகள்;

ஏற்றனர் மார்பு,

கவிழ்ந்தன மருப்பு,

கலங்கினர் பலர்.

அவருள், மலர்மலி புகல்எழ அலர்மலிர் மணிபுரை

நிமிர்தோர் பிணைஇ. 25

எருத்தோடு இமிலிடைத் தோன்றினன்; தோன்றி

வருத்தினான் மன்ற அவ்வேறு.

ஏறெவ்வம் காணா எழுந்தார் எவன்கொலோ ஏறுடை நல்லார் பகை. மடவரே நல்லாயர் மக்கள்; நெருநல் அடலேற்று எருத்து இறுத்தார்க் கண்டு மற்று இன்றும் உடலேறு கோள் சாற்றுவார். ஆங்கினித் தண்ணுமைப் பாணி தளராது எழுஉக; பண்ணமை இன்சீர்க் குரவையுள் தெண்கண்ணித் 35 திண்தோள் திறல்ஒளி மாயப்போர் மாமேனி அந்துவர் ஆடைப் பொதுவனோடு ஆய்ந்த முறுவலாள் மென்தோள் பாராட்டிச் சிறுகுடி மன்றம் பரந்தது உரை."

தலைவன் ஏறு தழுவினமை கண்டு, ஆயர் குரவையாடி மகிழ்ந்தது இது.

1. கண்ணகன் இரு விசும்பு - பரந்தவானம்; கதழ் பெயல் - விரைந்து பெய்யும் மழை 2. தளவம் - முல்லை, 3. தோன்றி - செங்காந்தள்; வயங்கு இணர் - விளங்கும் மலர்க்கொத்து;4. துதைய - நெருங்க, 5. தழையும் - தழையாடை போலவும்; இவ்வாறே ஏனையவற்றிற்கும் கொள்க. 6. தைஇனர் - கட்டி, திளைஇ -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/63&oldid=707907" இலிருந்து மீள்விக்கப்பட்டது