பக்கம்:முல்லைக்கொடி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ல் புலவர் கா. கோவிந்தன்

கொன்றை, செங்காந்தள், செம்முல்லை, வெட்சி, பிடா போலும் மலர்களுள், அவரவர் விரும்பும் மலர்களைப் பறித்துக் கொணர்ந்து மாலையாக்கிச் சூடி மாப்பிள்ளைக் கோலம் கொண்டனர்.

முல்லை அரும்போ, மயில் இறகின் முளையோ என மருளப் பண்ணும் வெண்ணிறப் பல் வரிசை அன்பும் அருளும் பெருகி வழியும் அழகிய கண்கள்; நாணம், மடம் முதலாம் மகளிர்க்குரிய மாண்புகளால் நிறைந்தமையால் சிலவேயாயினும் இனிமை சுரக்கும் சொற்கள்; செல்வ வாழ்வைச் சிறக்கக் காட்ட வல்ல சுடர் வீசும் பெரிய குழைகள் அணிந்த காது; இவ்வாறு உருவாலும் இயல்பாலும் நல்லவர் எனப் பிறர் பாராட்டும் பெருமைக்குரியர் அம்மகளிர்; அன்னார் தத்தம் தாய் தந்தையரோடும், தோழியரோடும் வந்து, தொழுவைச் சூழ அமைத்திருந்த பரணில் தமக்குரிய இடத்தில் ஏறி அமர்ந்தனர்.

வெண்ணிற அருவி வீழும் கரிய மலைபோல், வெளுத்த கால்களைக் கொண்ட கருநிறக் கொல்லேறு ஒன்று; அந்திக் காலத்துச் செந்நிறவானில் இடைஇடையே விண்மீன் விளங்கும் காட்சிபோல், செம்மேனியில் வெண்புள்ளி விளங்கும் நல்லேறு ஒன்று; அழிக்கும் தொழில் மேற்கொண்ட சிவபெருமானின் அழகிய சிவந்த சடையில் அணிந்திருக்கும் பிறைத் திங்கள்போல், வளைந்து வெண்ணிறம் வாய்ந்த கோடுகளைக் கொண்ட செந்நிறக் காளை ஒன்று. இவைபோலும் காளைகள் பலப்பல. கண்ணிற் படும் எப்பொருளையும் எதிர்த்து அழிப்பதை இயல்பாகக் கொண்ட அவ்வடலேறுகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/66&oldid=707910" இலிருந்து மீள்விக்கப்பட்டது