பக்கம்:முல்லைக்கொடி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி 65

நறைக்கொடி படர்ந்து பின்னிக் கிடக்கும் வேலி சூழ்ந்த தொழுவுள் விடப்பெற்றன. குதிரையும், கொல் களிறும், பாயும் சிங்கமும், பற்றி ஈர்க்கும் முதலையும் போலும் கொடு விலங்குகள் கூடி வாழும் மலைக் குகைபோல் தோன்றிக் கண்டாரை மருட்டிற்று அத்தொழு.

விழாத் தொடங்கி விட்டது. ஆயர்குல இளைஞர்கள், கொடிய கொல்லேறுகள் குழுமிக் கிடக்கும் அத்தொழு வினுள், திமுதிமு எனப் புகுந்தனர். சினத்தால் தமக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டிருந்த காளைகள், இளைஞர்கள் நுழையக் கண்டதும், அவர்மீது பாய்ந்தன. ஒன்றுகூடிப் பாய்ந்த எருதுகளுள், தாம்தாம் கட்டிப்பிடிக்க வேண்டிய காளை எது எனத் தேர்ந்து, அவ்வவற்றோடு, தனித்தனியே போரிடத் தொடங்கினர்.

இளைஞர்களோடு போரிடும் ஏறுகள், அப் போர் நிகழ்ச்சிக்கு இடையிடையே, வலிய வந்து தம்மைத் தாக்கும் தம் பகை ஏறுகளைக் குத்தி, அவற்றின் குடர் களைச் சரித்து, அவற்றின் ஆணவத்தை அடக்கித் துரத்தி விட்டு, அவற்றின் குருதி சொட்டும் குடர்கள் பின்னிக் கிடக்கும் தம் கோட்டால், இளைஞர் மார்புகளைத் தாக்க முனையும். கொல்லேற்றின் குருதி சொட்டும் குடர்கள், தன் வெண்ணிறக் கோட்டிடையே பின்னிக் கிடக்கப் பெருஞ் சினம் கொண்டு பாயும் அவ்வேறு, வெண்ணிறத் திங்கள் விளங்கும் பொன்னிறச் சடைமுடியில் செம்மலர் மாலைகள் சூடிவரும், கணிச்சிப் படை ஏந்திய கண்ணுதல்போல் காட்சி அளிக்கும்.

அக்காட்சியைக் கண்டவாறே, ஆங்கு வந்து சேர்ந்த ஆயர்பாடித் தலைவன் மகளும் அவள் தோழியும், ஊர்ப்

முல்லை-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/67&oldid=707911" இலிருந்து மீள்விக்கப்பட்டது