பக்கம்:முல்லைக்கொடி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 67

மற்றோர் இளைஞன், தன்னை வந்தெதிர்த்த எருதைப் போரிட்டு அடக்கினன்; அடங்கி நின்ற அதன் முதுகில் பாய்ந்து ஏறி அமர்ந்தான்்; பின்னர் அதன்மீதே படுத்தான்்; படுத்தவாறே அதை மெல்ல ஒட்டி மகிழ்ந்தான்்! அவன் செயல் கண்டு வியந்த தோழி, "தோழி! இவன், நம் ஆயர்பாடியில் ஆநிரை ஒன்றே வைத்து வாழும் நல்லினத்தாயர் தலைவன் மகன் போலும், தண்ணிர்த் துறையில் ஆடி மகிழ்ந்தவன், அந் நீர்த் துறையில் மிதந்து கிடக்கும் தெப்பத்தின்மீது திடுமெனப் பாய்ந்து, அதை உந்திக் கொண்டு செல்வான்போல், அடக்கிய ஏற்றின்மீது கிடந்து, அதைச் செலுத்திச் செல்லும் அவன் ஆண்மையைக் காண்! அவன் அழகைப் பார்!’ எனக் காட்டிப் பாராட்டினாள்.

கரிய காளை ஒன்று காற்றுப்போல் கடுகி வந்து தாக்கிற்று ஒர் இளைஞனை; இளைஞன், அதன் தாக்குதலுக்குச் சிறிதும் தளராமல், அதன் ஆண்மையை அழித்து, அதை அடக்கினான்; அடங்கி நின்ற அக்காரிமீது காலூன்றி ஏறி நின்றான். அவ்வழகிய காட்சியைக் கண்டு கலங்கிய தோழி, அதை ஆயர் தலைவன் மகளுக்குக் காட்டி, "தோழி! எருமைக் கடாமீது ஏறித் திரியும் இயமனைத் தன் கால்களால் உதைத்துத் தள்ளி, அவ்வெருமை மீது கால் வைத்து ஏறி நின்ற காலத்தில், சிவனும் இவன் போன்றே தோற்றம் அளித்தவன் போலும்! அவனைப் போன்றே, இவனும் சினத்தில் சிறந்தவன் போலும்! பெண்ணே ! இப்பொதுவன் ஆண்மையின் அழகைக் காண்!” எனக் கூறி வியந்து பாராட்டினாள். . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/68&oldid=707912" இலிருந்து மீள்விக்கப்பட்டது