பக்கம்:முல்லைக்கொடி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ஒ. புலவர் கா. கோவிந்தன்

பெண்களோடு நன்றாக அமராது, தனித்து வேறிடத்தில் அமர்ந்து, ஏறு தழுவும் நிகழ்ச்சிகளை இமை கொட்டாது கண்டிருந்தனர். -

குடர் சுற்றிய கோட்டோடு தன்மீது பாய்ந்த கொல்லேற்றை ஓர் இளைஞன், அதன் ஆற்றலை ஒடுக்கி அடக்கி நிறுத்தினான். அம் மகிழ்ச்சியால் அதன் முன்னின்று ஆடினான்; ஆடியவாறே அதன் இரு கோடுகளிலும் மாறி மாறிப் பிணிப்புண்டு கிடக்கும் குடரினைத் தன் இரு கைகளாலும் வாங்கி வாங்கி விடுக்கத் தலைப்பட்டான்; அக்காட்சியைக் கண்டாள் தோழி. "செந்நூல் சுற்றப் பெற்றுள்ள கழியை ஒருவன் கையில் ஏந்தி நிற்க, அதைத் தன் இரு கைகளாலும் வாங்கி வாங்கி முந்நூல் ஆக்கும் அந்தணச் சிறுவன் போலும் அவ்வாயர் குல இளைஞன் ஆற்றலைக் காண்!" என அப்பெண்ணுக்குக் காட்டி அகம் மகிழ்ந்தாள்.

மையினம் ஒன்றே பெற்று வாழும் கோட்டினத்து த்து வந்த ஒர் இளைஞன், போர் வெறிகொண்டு ால்லேற்றின் கழுத்தில் பாய்ந்து ஏறினான்; அக் ால் கற்கள்போல் தன் உடலை உறுத்துவதையும் கிக்காது, மலர் மாலைபோல் அதன் கழுத்தை கொண்டான். அக் காட்சியைக் கண்ட ானுக்கும் காட்டி, "தோழி! அவன் ாத்து ஆயர் குடியில் வந்தவன் எழுத்தை இறுகத் தழுவியவன், அதன் லது, தன் பிடியை விடான் போலும்; ஆண்மை! என்னே அவன் பெருமை!” ாட்டினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/69&oldid=707913" இலிருந்து மீள்விக்கப்பட்டது