பக்கம்:முல்லைக்கொடி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 இல் புலவர் கா. கோவிந்தன்

துய வெண்ணிறம் வாய்ந்திருந்த ஒர் ஏறு; வேறு

புள்ளி எதுவும் அதன் உடலில் இடம் பெறவில்லை. அது தன் ஆற்றல் எல்லாம் காட்டி ஓர் இளைஞனைத் தாக்கிற்று. அதன் தாக்குதலைத் தளராது நின்று தாங்கிக் கொண்டான்; எதிர்த்துத் தாக்கி அதை அடக்கினான்; ஆணவம் அழிந்து அடங்கி நிற்கும் அதன் அருகிற் சென்று, அதை அணைத்து நின்றான். வெள்ளேற்றைத் தழுவி நிற்கும் அக் கருநிற மேனியானைக் கண்டாள் தோழி. அவனைத் தன் உயிர்த் தோழிக்கும் காட்டினாள்; காட்டி, "பெண்ணே! அவ்விளைஞன் ஆடு மேய்க்கும் ஆயர் குடியில் வந்தவன் போலும்; வெண் திங்கள் இடையே விளங்கும் மறுப்போல் காட்சி அளிக்கும் அவன் நிற்கும் அழகைக் காண்!" எனக் கூறி அவன் ஆண்மையைப் பாராட்டினாள்.

இடை புகுந்து தடுக்க மாட்டா வேகத்தோடு, கடுங் கோபம் கொண்டு பாய்ந்து வந்தது ஒரு செந்நிறக் காளை. அதைக் கண்டான் ஓர் இளைஞன், காயாம்பூ வைத்துக் கட்டிய மாலை தலையில் கிடந்து மணக்க நின்ற அவ்விளைஞன், அக் கொல்லேற்றின் முன் மெல்லச் சென்றான். பாய்ந்தோடி வரும் அதன் இரு கோடு களையும் கைகளால் அழுந்தப் பற்றிக் கொண்டான். அந்நிலையே அதன் ஆற்றல் அழிந்தது. தளர்ந்து வீழ்ந்த அதன் அருகில் நின்று இளைஞன் அகம் மகிழ்ந்தான்். அவன் ஆற்றிய அருஞ்செயல் கண்டு நடுங்கிய தோழி, அதை அப் பெண்ணுக்குக் காட்டி, "தோழி! தன் தாய்மாமனும், தன் பெரும் பகைவனுமாகிய கம்சன் ஏவக், குதிரை வடிவாய்த் தன்மீது பாய்ந்து வந்த கேசி என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/70&oldid=707914" இலிருந்து மீள்விக்கப்பட்டது