பக்கம்:முல்லைக்கொடி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி * 69

அரக்கனைப் பிடித்து, வாயைப் பிளந்து, கையால் புடைத்து உயிர் போக்கிய அன்று, கண்ணனும், காயாம்பூ அணிந்து, இவ்விளைஞன் போல் காட்சி அளித்தான்் போலும்,” என வியந்து கூறிப் பாராட்டினாள். -

இந்நிலையில், ஏறு தழுவும் போர் முடிவுற்றது. ஒருபால் புலிக் கூட்டமும், ஒருபால் யானைக் கூட்டமும் நின்று போரிட்டதுபோல் காளைகளும் காளைநிகர் இளைஞர்களும் பொருதப் போர் ஒய்ந்தது. ஆயர் தம் எருதுகளோடு தொழுவை விட்டு வெளியேறினர்; எல்லோரும் வெளியேறினர்; ஆனால் அவ்வூர்த் தலைவன் மகளும், அவள் தோழியும் மட்டும் வெளியேறவில்லை. அப் பெண்ணின் உள்ளத்தில் அமைதி குலைந்தது; கொல்லேறு தழுவும் காட்சி இன்பத்தில் தன் கவலை மறந்திருந்த அவள், அந்நிகழ்ச்சி முடியவே, மீண்டும் கவலைக்குள்ளானாள். அகத்தில் துயர் மிக, ஆயர் இளைஞர்களின் தலைமாலைகளில் கட்டப் பெற்றிருந்த காயாம் பூக்கள் உதிர்ந்து, மயில் கழுத்துப்போல் காட்சி அளிக்கும் தொழுவகத்துச் செம்மண்ணை வெறித்து நோக்கியவாறே வாய்மூடிக் கிடந்தாள்.

அவள் உள்ளக் கவலையைத் தோழி உணர்ந்தாள். "பெண்ணே ! நம்மோடு உடன் ஆடும் தோழியர்க்கு மட்டும் திருமணம் உறுதியாகி விட்டதே என எண்ணி நீ கவலை கொள்ளாதே. இன்று அவர் காதலர் ஏறு தழுவி, அவர் கைப்பற்றியதுபோல், நம் காதலனும், ஒருநாள் நம் ஏற்றினை அடக்கி நம்மை மணப்பன். நம் காதலன், ஆயர், தம் மகளை ஏறுதழுவி வெல்வார்க்கே மணம் செய்து தருவர் என்பதை உணர்தல் வேண்டும்; அவன் அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/71&oldid=707915" இலிருந்து மீள்விக்கப்பட்டது