பக்கம்:முல்லைக்கொடி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஆ. புலவர் கா. கோவிந்தன்

இன்னமும் உணர்ந்திலன்; அது அவன் உள்ளத்தில் ஆழப்பதிந்து விட்டால், ஏறு தழுவ அன்றே வந்துவிடுவன்; நாம் அதை அவனுக்குத் தெளிவாக உணர்த்துதல் வேண்டும்; அதற்கு ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளது. பெண்ணே! இன்று ஏறுதழுவி வென்ற இளைஞர்களும், அவரை மணக்கப்போகும் மகளிரும், நம் குல வழக்கப்படி, நம்மூர் மன்றத்தில் ஒன்றுகூடிக் கைகோத்து நின்று குரவைக் கூத்தாடி மகிழ்வர். அக் கூத்தைக் காண ஊரெல்லாம் திரண்டு வரும், ஏறு தழுவியதை ஈங்குக் கண்ட நம் காதலனும் ஆங்கு வருவன்; ஆங்கு நாமும் செல்வோம்; சென்று அவர் ஆடும் குரவைக் கூத்திற்குப் பின்னணிப் பாடல் பாடும் பணியை நாம் மேற்கொள்வோம். பாட்டின் மரபு கெடாவாறு, தொடக்கத்தில், கடலை எல்லையாகக் கொண்டு பரந்து கிடக்கும் பழம் பெரும் நாடாகிய நம் பாண்டி நாடாளும் அரசன் வாழ்க எனத் தென்னவனையும், உலக உயிர்களுக்கு உணவூட்டிக் காக்கும் கடமையில் குன்றாத் தெய்வத்தையும் வாழ்த்தும் வாழ்த்துப் பாடலைப் பாடுவோம். பின்னர்க்,

கொல்லேற்றின் கொம்பைக் கண்டு அஞ்சுவானை, ஆயர்மகள் மறுமையிலும் மணக்க மனம் கொள்ளாள் எனவும்,

ஆயர் குலமகள், அஞ்சாது முன்வந்து, கொல் லேற்றை அடக்கி, அதனால் உயிர் துறந்தாரைக் கண்டே வருந்துவள்; அவர் அஞ்சாமையும் ஆண்மையும் கண்டே வியப்பள்; ஏறுகண்டு அஞ்சுவானின் ஆண்மையின்மை கண்டே அவள் வருந்துவள்; அத்தகையாள் தோளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/72&oldid=707916" இலிருந்து மீள்விக்கப்பட்டது