பக்கம்:முல்லைக்கொடி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 71

கொல்லேறு கண்டு அஞ்சாது, உயிர் இழக்கவும் துணிந்து அடக்குவான் எவனோ, அவனே தழுவுவதற்கு உரியன் எனவும்,

உடலில் நிலவும் உயிரை, என்றேனும் ஒடி விடும் ஒரு காற்றாகக் கருதாது, அதைக் கிடைத்தற்கரிய ஒரு பொருள் என மதித்து, இழந்து விடாவாறு, கவலையோடு காத்துக் கொல்லேற்றின் கோடஞ்சி வாழும் ஆயர்க்கு, ஆயர்குல மகளிர் தோள் தழுவுதற்கு எளியவோ எனவும்,

மகளிர் மார்பில் வீழ்ந்து மகிழ்ந்து ஆடுவார் போல், கொல்லேற்றின் கோடுகளுக்கு இடையே, அஞ்சாது வீழ்ந்து அடக்குவாரிடத்தில், ஆயர்குலத் தலைவர், தம் மகளிர்க்கு விலையாகப் பொருள் எதுவும் வேண்டார் எனவும், நம் ஆயர்குல இயல்பினைப் பாடற்பொருளாக அமைத்துப் பாடுவோம்; குரவைக் கூத்தைக் காண வந்திருக்கும் நம் காதலன் காதுகளுள், நாம் பாடும் பாட்டின் பொருள் சென்று புகும். நம் கருத்தை அவன் அறிந்து கொள்வன். ஏறுதழுவ இன்றே துணிவன்; ஆகவே, தோழி! குரவைப் பாட்டுப் பாட, அது நிகழும் ஊர் மன்றத்தை அடைவோம்; வருக!" எனக் கூறி அழைத்துச் சென்றாள். " .

"மெல்லினர்க் கொன்றையும், மென்மலர்க் காயாவும் புல்லிலைவெட்சியும், பிடவும், தளவும், குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும், கல்லவும், கடத்தவும் கமழ்கண்ணி மலைந்தனர், பல்லான் பொதுவர், கதழ்விடை கோள் காண்மார், 5 முல்லைமுகையும், முருந்தும் நிரைத்தன்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/73&oldid=707917" இலிருந்து மீள்விக்கப்பட்டது