பக்கம்:முல்லைக்கொடி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ 73

இகுளை! இஃதுஒன்று கண்டை; இஃதுஒத்தன்; கோட்டினத்து ஆயர்மகன் அன்றே? யீட்டொவான், போர்புகல் ஏற்றுப்பினர் எருத்தில் தத்துபு தார்போல் தழிஇயவன். 35 இகுளை! இஃதுஒன்று கண்டை இஃது ஒத்தன்; கோவினத்தாயர் மகன் அன்றே? ஒவான் மழையேற்றின் மேலிருந்து ஆடித், துறையம்பி ஊர்வான்போல் தோன்றுமவன்.

தொழிஇ! காற்றுப்போல்வந்த கதழ்விடைக் காரியை 40 ஊற்றுக் களத்தே அடங்கக்கொண் டட்டு அதன் மேல்தோன்றி நின்ற பொதுவன் தகைகண்டை; ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பின் இடந்திட்டுச் சீற்றமோடு ஆருயிர்கொண்ட ஞான்று இன்னன்கொல் கூற்று! என உட்கிற்று என்நெஞ்சு. 45

இகுளை! இஃதுஒன்று கண்டை; இஃதுஒத்தன், புல்லினத்தாயர் மகன் அன்றே? புள்ளி வெறுத்த வய்வெள்ளேற்று அம்புடைத் திங்கள் மறுப்போல் பொருந்தி யவன். ஒவா வேகமோடு உருத்துத் தன்மேல் சென்ற 50 சேஎச் செவிமுதல்கொண்டு பெயர்த்து ஒற்றும் காயாம்பூங் கண்ணிப் பொதுவன் தகைகண்டை; மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை வாய்பகுத்திட்டுப் புடைத்த ஞான்று, இன்னல்கொல் மாயோன் என்று உட்கிற்று என்நெஞ்சு. 55

ஆங்கு இரும்புலித் தொழுதியும் பெருங்களிற்று இனமும் மாறுமாறு உழக்கியாங்கு உழக்கிப் பொதுவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/75&oldid=707919" இலிருந்து மீள்விக்கப்பட்டது