பக்கம்:முல்லைக்கொடி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'74 இ. புலவர் கா. கோவிந்தன்

ஏறுகொண்டு ஒருங்கு தொழுஉ விட்டனர்; விட்டாங்கே மயில்எருத்து உறழ்அணி மணிநிலத்துப் பிறழப், பயில்இதழ் மலர் உண்கண் 60 மாதர் மகளிரும் மைந்தரும் மைந்துற்றுத் தாதெரு மன்றத்து அயர்வர் தழுஉ.

கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆய மகள்.

அஞ்சார் கொலையேறு கொள்பவர் அல்லதை 65

நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர்துறந்து நைவாரா ஆயமகள் தோள்.

வளியா அறியா, உயிர்காவல் கொண்டு நளிவாய் மருப்பஞ்சும் நெஞ்சினார், தோய்தற்கு எளியவோ ஆயமகள் தோள். 70

விலைவேண்டார் எம்மினத்து ஆயர், மகளிர் கொலையேற்றுக் கோட்டிடைத், தாம்வீழ்வார் மார்பின் முலையிடைப் போலப் புகின்.

ஆங்கு, குரவைதழிஇ யாம் மரபுளி பாடத் தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும் 75 மாசில்வான் முந்நீர்ப் பரந்த தொன்னிலம் - ஆளும் கிழமை யொடு புணர்ந்த எங்கோ வாழியர்இம் மலர்தலை உலகே.'

5

கொல்லேறு தழுவலைத் தோழி தலைவிக்குக் காட்டிப், பின்னர் அவர் குரவையாடுவதை நினைப்பூட்டி, யாமும் சென்று, தலைவன் ஏறு தழுவி, உன்னை மணத்தற்பொருட்டு, ஆயர் மனை இயல்பைப் பாட்டிடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/76&oldid=707920" இலிருந்து மீள்விக்கப்பட்டது