பக்கம்:முல்லைக்கொடி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 77

z: அவனைக் காதலித்தாள்; அவர் காதல் உறவு, நாள் ஒரு மேனியும், பொழுது ஒரு வண்ணமுமாக வளர்ந்தது. ஆனால், அவர் காதலைப் பெற்றோர் அறியார். ஆதலின், இருவரும் தம் காதலை மறைத்து மறைத்து வாழவேண்டிய வராயினர்; அதனால், அவர் காதல்வாழ்வு எத்துணையோ இடையூறுகளுக்கு உள்ளாயிற்று. அப்பொழுதெல்லாம் அவள் கவலை மிகக் கொண்டாள். அகத்தில் கவலை மிகவே, அவள் புற நலமும் பாழாயிற்று. அம் மாறு பாட்டை உணர்ந்த ஊரார், அதற்குக் காரணம் யாது என ஆராயத் தலைப்பட்டனர்; அவர் கழுகுக் கண்கள் அவள் கள்ளக் காதலைக் கண்டு கொண்டன; அன்று முதல் அவளைக் காணும்போதெல்லாம், அவள் காதில் படுமாறு, அவளை இழித்தும் பழித்தும் பேசத் தலைப் பட்டனர்; அந்நிலையை அவளால் தாங்கிக் கொள்வது இயலாது போயிற்று. ஊரார் கூறும் அலர் கேட்டு அவள் உள்ளம் உறுதுயர் அடைந்தது. அவளுக்கு ஒரு தோழி; அப் பெண்ணைப் பேணிக் காக்கும் பொறுப்பேற்றுக் கொண்டவள் அத் தோழி. அவள், இந்நிலை நீண்டால், இப் பெண் உயிர் இழந்து போவளே என அஞ்சினாள். அத் துயர் தீர்க்கும் வழி காண முற்பட்டாள்; அப் பெண்ணின் காதலனைக் கண்டாள்; அவள் துயர் நிலையை அவன் உணரும் வகையில் விளங்கக் கூறினாள்; இறுதியாக, ஆயர்குல வழக்கப்படி, ஏறுதழுவி, அவளை விரைவில் வரைந்து கொள்ளுமாறு வேண்டிக் கொண்டாள். -

காதலியின் கலக்கம் காணப் பொறாத அவ் விளைஞன், அன்றே அப் பெண்ணின் பெற்றோரைக்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/79&oldid=707923" இலிருந்து மீள்விக்கப்பட்டது