பக்கம்:முல்லைக்கொடி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 இ. புலவர் கா. கோவிந்தன்

கண்டு, அவர் மகளைத் தான்் மணக்க விரும்புவதாகவும், அதன் பொருட்டு ஏறு தழுவ முன்வந்திருப்பதாகவும் அறிவித்தான்். அது கேட்ட அவள் தந்தை ஊர்ப் பெரியவரிடத்தில் சென்று உற்றது உரைத்தான்். உடனே அப்பெரியோர், "அவ்வாறாயின் நம்மூரில் மணப்பருவம் பெற்றுள்ள மகளிர் அனைவருக்கும் மாப்பிள்ளைமார் தேடும் ஏறு தழுவல் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும், ஒரேயடியாக இன்றே நடத்தி விடுவோம்!” என்றனர். அவ்வாறே, ஊரில் பறையறைந்து செய்தி அறிவிக்கப் பட்டது.

பறையொலி கேட்ட ஆயர்களும், மணமேடை ஏறக் காத்து நிற்கும் அக்குலக் கன்னியர்களும் ஊர் மன்று அடைந்தனர்; ஆங்கே கட்டுவேலி அமைத்து ஆக்கிய தொழுவினுள், அம்மகளிர்க்கு என வளர்த்த காளைகளை விடுத்து, ஆயரும் அவர் மகளிரும், அத் தொழுவைச் சூழ அமைந்திருந்த பரணில் ஏறி அமர்ந்தனர்.

பனைக் கொடியேந்திய பலராமனின் பால் போலும் வெண்ணிற மேனியை வென்ற, மாசுமறுவற்ற வெள்ளேறு. கையில், பகையழிக்கும் பெருமை வாய்ந்து, பசும்பொன் னால் பண்ணப் பெற்ற சக்கரப் படையையும், மார்பில் மலர் மகளையும் தாங்கிய திருமாலின் கருநிற மேனியை நிகர்க்கும் கருநிறக் காளை, ஒளி வீசும் செஞ்சடையும், அச் சடையில் சூடிய பிறைத் திங்களும், நெற்றிக் கண்ணும் உடையோனாய சிவபெருமானின் கருமை கலந்த பொன்னார் மேனியை வென்ற கபிலநிறக் காளை; கடல் கலங்கச் சென்று, ஆங்கு மரவுருவில் மறைந்து நின்ற அரக்கனை அழித்த வெற்றிப் புகழ் மிக்க வேலேந்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/80&oldid=707924" இலிருந்து மீள்விக்கப்பட்டது