பக்கம்:முல்லைக்கொடி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 79

முருகப் பெருமானின் செம்மேனியின் நிறம் வாய்த்த செவ்வெருது; இவையும், இவை போலும் ஏறுகள், வேறு சிலவும், அவை மேகங்கள் பலக.டி இடிப்பான் போல் முழங்கி ஒலி எழுப்ப, அத் தொழுவினுள் கொண்டு விடப்பெற்றன.

உடனே, ஊர்த் தலைவன் எழுந்தான்்; விண்மீன்கள் சூழ்ந்து கிடக்க, ஒளிவீசி வரும் வான்மதி போல், தத்தம் தோழியர் சூழ்ந்து நிற்க, அவரிடையே அமர்ந்திருக்கும் அம் மகளிரைத் தனித்தனியே சுட்டிக் காட்டினான். காட்டிவிட்டு, 'அவ் வெள்ளேற்றை அடக்கி, அதன் கழுத்தில் ஏறி அமருவான் எவனோ, அவன், இதோ நிற்கும், முள் போலும் கூரிய பற்களையுடையளாய இவ்வழகியை மணப்பன்; அக் கருநிறக் காளையின் கூரிய கோடு கண்டு அஞ்சாது அடக்கிப் பிடிப்பவன். ஒளிவீசும் அணிபல அணிந்து அழகிற் சிறந்து நிற்கும் இப் பெண்ணின் வாரி முடித்த கூந்தலில் கிடந்து துயிலும் உரிமையைப் பெறுவன், கபிலநிறக் கண்ணும், கொலைத் தொழிலும் வாய்ந்த அக் கொடிய காளையைக் கட்டிப் பிடிப்பவன், மருண்டு மருண்டு நோக்கும் இம் மான்விழி யாளை மனைவியாக அடைவன்; வெல்லற்கரிய வன்மை வாய்ந்த அச் செந்நிறக் காளையின் சினங்கண்டு சிந்தை கலங்காது அடக்கி ஆள்பவன், அழகிய காதில் குழை கிடந்து அசையும் இவள் மூங்கில்போலும் மென்மை வாய்ந்த தோளிற் கிடந்து துயில் கொள்ளும் உரிமை தரப் பெறுவன்!" என, ஆங்கு வந்துள்ள கன்னிப் பெண் களையும் அவர்களுக்கு என வளர்த்துவிடப் பெற்ற காளைகளையும் முறையே காட்டி அறிமுகம் செய்து அமர்ந்தான்். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/81&oldid=707925" இலிருந்து மீள்விக்கப்பட்டது