பக்கம்:முல்லைக்கொடி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 இ gಖಖಗೆ கா. கோவிந்தன்

தலைவன் அமர்ந்ததும் தொழுவைச் சூழ, நாற் புறமும் நறுமணப் புகை புகைக்கப் பெற்றது; புகை மணம் நுகர்ந்து ஆயர் ஆரவாரித்தனர்; பறைபல முழங்கின. புகை கண்டு, ஆயர் ஆரவாரத்தையும், பறை முழக்கையும் கேட்டுக் காளைகள் மருண்டு, கடுஞ்சினம் கொண்டு, தம்மை நோக்கி வரும் இளைஞர்களை இமைகொட்டாது நோக்கி நின்றன.

இளைஞன் ஒருவன் பரணைவிட்டு இறங்கித் தொழு வினுள் புகுந்தான்். வெண்ணிறக் காளைக்கு உரியாளை விரும்பியவன் அவன்; அதனால், அவ்வெள்ளேற்றினை நோக்கி விரைந்து சென்றான்; வேலின் முனை போலும் கூர்மையும், உறுதிப்பாடும் மிக்க அதன் கோடு கண்டு அஞ்சாது, அதன் கழுத்தின் மீது பாய்ந்தான்். வெள்ளேற் றின் அண்மையில் இருந்த ஒரு கருநிற இளங்காளை அவனைப் பார்த்து விட்டது; தன் இனக்காளை ஒன்று கட்டுக்குள்ளாவதைக் காண, அதனால் பொறுக்க இயல வில்லை; அதனால் கடுஞ்சினம் கொண்டு அவன்மீது பாய்ந்து, தன் கூரிய கொம்புகளால் குத்தி அலைத்தது. பால்போல் ஒளிவீசும் முழுமதியைப் பற்றி மறைக்கும் பாம்பை அகற்றி, அவ் வெண்திங்களை விடுவிக்கும் நீலவண்ண நெடுமால் போன்ற அக் கருங்காளையின் கொடுமை கண்டு கலங்கினாள், அவ்வாயனைக் காதலிக்கும் கன்னி.

அறிவை மயக்கும் மருந்திட்டு எழுப்பிய புகையை நுகர்ந்ததனால் மதம் கொண்டு, கண்ணிற் படும் எப்பொருளையும் அழித்துத் திரியும் கொடிய கொல்களிறு போல், தன் எதிர்வருவார் அனைவரும் எலும்பு முறிந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/82&oldid=707926" இலிருந்து மீள்விக்கப்பட்டது