பக்கம்:முல்லைக்கொடி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் ೧ಹT; ↔ 81

குடர்கள் சரிந்து, அஞ்சி அதிர்ந்து நிலைகெட்டு நீங்குமாறு அவர்களை அலைக்கழித்து விட்டு, அச்சினம் அடங்கா முன்னரே, தன்னை அடக்கத் தன் கொம்புகளின் இடையே பாய்ந்து தன்னைத் தாக்கிய இளைஞனை வாட்டி வருத்திற்று ஒரு காளை. அக் காளையின் கொடுஞ்செயல் கண்டு கலங்கிக் கண்ணிர் சொரிந்தாள் அக் காளைக்கு உரியாள் ஒரு பெண்.

தன் தோள்வலியால் எத்தகைய அடலேற்றையும் அடக்கி விடலாம் என்ற ஆண்மை யுள்ளம் வாய்க்கப் பெற்ற இளைஞன் ஒருவன், அவ்வூக்கம் உந்த விரைந்து வந்தான்்; தொழுவினுள் புகுந்தான்்; இடைவழியில் நின்று எதிர்த்த காளைகள் அனைத்தையும் அடக்கிக் கொண்டே முன்னேறினான். அவன் கண்ணோட்டம் கபிலநிற ஏற்றின் மீது; அதை நெருங்கினான்; எவருக்கும் அடங்காது இருந்த அதைத் தன் தோள்வலியால் தழுவிப் பிடித்து விட்டான்; இன்னமும் சிறிது முயன்றால் அதை ஆற்றலிழக்கப் பண்ணியிருப்பன்; ஆனால், அந்தோ! பிடி தளர்ந்து விட்டது; திடுமென அதன் முன் வீழ்ந்து விட்டான். வீழ்ந்தான்ைக் கண்டது அக் கபிலை; தன் ஆற்றலை அடக்கியவன் இவன்; இவனை அழித்துவிட வேண்டும்; அதற்கு இதுவே ஏற்ற சமயம் என எண்ணி அவன்மீது பாயவில்லை; மாறாக, வீழ்ந்தவன் எழுந்து செல்லுமாறு, வாளா விடுத்து, அவ்விடம் விட்டு அப்பாற் சென்றது. களத்தில், கையில் வாள் ஏந்தித் தன்னோடு கடும் போர் இட்ட பகைவன், இறுதியில் தோற்று, வாளோடு பிடிபடக் கண்ட பெருவீரன் ஒருவன், "என் முன் தலை வணங்கி நிற்கும் இவன், இனி என்னோடு

முல்லை-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/83&oldid=707927" இலிருந்து மீள்விக்கப்பட்டது