பக்கம்:முல்லைக்கொடி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ↔ புலவர் கா. கோவிந்தன்

பழிக்கும் நிலை கடந்து விட்டது; அவர் அலர்கண்டு, ஆயர் குலத்தில் வந்த இந்தச் சிறுமி இனி அஞ்ச மாட்டாள்; இதுகாறும் எம்மைக் கண்டு எள்ளி உரைத்த இவ்வூர்ப் பெண்கள், இனி, நான் என் காதலன் மார்பில் வீழ்ந்து கிடக்கக் கண்டு, நாணிக் கண் புதைத்துத் தலை தாழ்த்திச் செல்வாராக!" எனத் தன் அகமகிழ்ச்சி புறத்தே பொங்கி வழிய, ஆடியும் பாடியும் அகம் மகிழ்ந்தவாறே மன்றினை அடைந்தாள்.

மன்றம் அடைந்து, ஊர்ப் பெண்களோடு கூடி, அவளும் குரவை ஆடிக் களித்தாள். கூத்தாடும் அவளை அவள் காதலன் கண்டான்; அவள் ஆடலும் பாடலும் கண்டு மகிழ்ந்தான்்; இருப்பினும் ஊரெல்லாம் திரண்டிருக்கும் ஆங்கு, அவள், அவ்வாறு தன்னை மறந்து மகிழ்ந்து கூத்தாடல் நன்றன்று, என எண்ணினான் போலும்; அக்குறிப்புப் புலனாக அவளைச் சிறிது உறுத்து நோக்கினான். அப் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்டாள் அவள்; ஆனால் அதற்காக, அவள் தன் ஆட்டத்தையும் பாட்டையும் கைவிட்டிலள்; மாறாகத் தன் தோழியை அழைத்து, அவனையும், அவன் பார்வையை யும் அவளுக்குக் காட்டி, "தோழி! காதலன் பார்க்கும் பார்வையைப் பார். கொலையேற்றை அடக்கி விட்டேன்; இனி நீ எனக்கு உரியவள்; இனி, யான் பணிக்கும் வண்ணம் பணிந்து ஒழுக வேண்டியவள் நீ, எனக் கூறும் செருக்கு அவன் பார்வையில் பொதிந்திருப்பது புலனா வதைப் பார்!" எனக் காட்டிப் பரிகசித்துப் பாடினாள்.

அவள் கூறியன கேட்ட தோழி, "பெண்ணே! அவன் கருதுவதிலும் உண்மை உளது; எவராலும் அடக்குவதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/86&oldid=707930" இலிருந்து மீள்விக்கப்பட்டது