பக்கம்:முல்லைக்கொடி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி 85

அரிது எனக் கூறி, நம் பெற்றோர் கொண்டு வந்து நிறுத்திய நம் கருநிறக் காளையை, அதன் கடுஞ்சினம் கண்டும், அஞ்சாது பாய்ந்து அடக்கி விட்டான். அதனால், நம் பெற்றோர் நனி மிக மகிழ்ந்து, இவ்வூர்ப் பெண்கள் நாவடங்குமாறு உன்னை அவனுக்கே உரிமையாக்கி விட்டனர்; இனி, நீ அவன் உரிமை மனைவி; அவன் உளம் அறிந்து நடந்து கொள்ள வேண்டியவள்,” எனக் கூறி அவளுக்கு அறிவூட்டினாள்.

அந்நிலையில் குரவைக் கூத்தும் முடிவுற்றது; ஊர்ப் பெண்களோடு கூடி, "ஓயாது ஒலிக்கும் போர் முரசினை உடைய பாண்டியன் ஆணை இவ்வுலகெங்கும் சென்று நடைபெறுக! அவன் ஒரு மொழிக் கீழ் இவ்வுலகெலாம் சென்று சேர்க!” எனக் கூறிப் பழம்பெரும் பேரரசின் தலை வனாய் விளங்கும் பாண்டியனைப் பாராட்டுபவர்போல் நாட்டு வாழ்த்துப் பாடி விழா முடித்து வீடடைந்தனர்.

"மலிதிரை ஊர்ந்து தன்மண் கடல் வெளவலின்; மெலிவின்றி மேற்சென்று மேவார்நாடு இடம்படப், புலியொடு வில்நீக்கிப், புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன் தொல்லிசை நட்டகுடியொடு தோன்றிய 5 நல்லினத்து ஆயர் ஒருங்கு தொக்கு எல்லாரும், வானுற ஓங்கிய வயங்குஒளிர் பனைக்கொடிப் பால்நிற வண்ணன்போல் பழிதீர்ந்த வெள்ளையும், பொருமுரண் மேம்பட்ட பொலம்புனை புகழ்நேமித் திருமறு மார்பன்போல் திறல்சான்ற காரியும், 10

மிக்குஒளிர் தாழ்சடை மேவரும் பிறைநுதல் முக்கண்ணான் உருவேபோல் முரண்மிகு குராலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/87&oldid=707931" இலிருந்து மீள்விக்கப்பட்டது