பக்கம்:முல்லைக்கொடி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ↔ புலவர் கா. கோவிந்தன்

மாகடல் கலக்குற மாகொன்ற மடங்காப்போர் f வேல்வல்லான் நிறனேபோல் வெருவந்த சேயும், ஆங்கு அப் பொருவரும் பண்பி னவ்வையும் பிறவும் 15

உருவப்பல் கொண்மூக் குழிஇயவை போலப் புரிபு புரிபு புகுத்தனர் தொழுஉ அவ்வழி முள்ளயிற்று ஏனர் இவளைப் பெறும் இதோர் வெள்ளேற்று எருத்து அடங்குவான். ஒள்ளிழை, வார்உறுகூந்தல் துயில்பெறும், வைமருப்பின் 20

காரி கதன் அஞ்சான் கொள்பவன், ஈரரி வெரூஉப்பினை மான்நோக்கின் நல்லாள் பெறுஉம், இக் குரூஉக்கண் கொலையேறு கொள்வான்; வரிக்குழை வேய்உறழ் மென்தோள் துயில்பெறும், வெந்துப்பின் சோய் சினன் அஞ்சான் சார்பவன்! என்றாங்கு 25 அறைவனர் நல்லாரை ஆயர், முறையினால் நாள்மீன்வாய் சூழ்ந்த மதிபோல் மிடைமிசைப் பேணி நிறுத்தார் அணி.

அவ்வழிப், பறைஎழுந்து இசைப்பப், பல்லவர் ஆர்ப்பக், குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த 30 நறைவலம் செயவிடா இறுத்தனஏறு. அவ்வேற்றின், மேல்நிலை மிகல் இகலின் மிடைகழிபு இழிபு மேற்சென்று வேல்நுதி புரைவிரல் திறல்நுதி மருப்பின் மாறஞ்சான், பால்நிற வெள்ளை எருத்தத்துப் பாய்ந்தான்ை 35 நோனாது குத்தும் இளங்காரித் தோற்றம் காண், பால்மதி சேர்ந்த அரவினைக் கோள்விடுக்கும் நீல்நிற வண்ணனும் போன்ம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/88&oldid=707932" இலிருந்து மீள்விக்கப்பட்டது